நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் கடைசியாக வெளியான ஷாருக்கானின் ஜவான், மெரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து குரங்கு பொம்மை படத்தை எடுத்த இயக்குநர் நிதிலன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி தனது 50 வது படமான மகாராஜா படத்தில் நடித்துள்ளார். மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த படங்களை தொடர்ந்து “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” படத்தின் இயக்குநர் ஆறுமுக குமார் நடிகர் விஜய் சேதுபதி 51வது படத்தை இயக்கியுள்ளார்.
7சிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள VJS 51 படத்திற்கான படப்பிடிப்பு முழுக்க முழுக்க மலேசியாவில் நடைபெற்றது.
இந்த படத்தில் நடிகர்கள் ருக்மணி வசந்த், யோகி பாபு, திவ்யா பிள்ளை, பி.எஸ்.அவினாஷ், பப்லு பிரித்விராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் VJS 51 படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிந்து விட்டது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது.
VJS 51 படத்திற்கு “Ace” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் அறிவிப்பை முன்னிட்டு படத்தின் மோஷன் அனிமேஷன் வீடியோவை படக்குழு வெளியிட்டது.
அந்த வீடியோவை பார்க்கும் போது, சூதாட்டம், கடத்தல், கேங்ஸ்டர் என அனைத்தும் கலந்த ஒரு டார்க் காமெடி படமாக இந்த “Ace” திரைப்படம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. விரைவில் “Ace” படம் குறித்த மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இலவசம்: ஜியோவின் அதிரடி ஆஃபர்… விவரம் இதோ!