தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவர்களுக்கு SIR பார்ம் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். இதை யார் செய்கிறார்கள் என்பதை நான் சொல்லி தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்று அவசியம் இல்லை. இப்போது இருக்கும் ஆட்சியாளர்கள் அவங்களுக்கு கை பாவையாக இருக்கும் சிலபேர் இதை செய்ய ஆரம்பித்துள்ளனர் என நடிகரும், தவெக தலைவருமான விஜய் குற்றம் சாட்டி உள்ளார்.
SIR குறித்து 9 நிமிடங்கள் 20 வினாடிகள் வரை விஜய் பேசிய வீடியோ ஒன்று அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியாகி உள்ளது. அதில், “இந்திய அரசியல் சாசனம் தமிழகத்தில் இருக்கும் எல்லோருக்கும் கொடுத்துள்ள உரிமைகளில் மிகவும் முக்கியமானது வாக்குரிமை. ஒரு மனிதன் உயிருடன் இருப்பதற்கு அடையாளமாக இருப்பதில் அவனது ஓட்டுரிமை மிகவும் முக்கியம்.
இப்போது தமிழகத்தில் யாருக்குமே வாக்குரிமை இல்லை. என்று சொன்னால் நம்புவீர்களா? நான் பயமுறுத்துகிறேன் என்று நினைக்காதீங்க.. அதுதான் நிஜமும் கூட. கொஞ்சம் ஏமாந்தால் நம்மை போல லட்சக்கணக்கான பேருக்கு இந்த நிலைமைதான். ஓட்டுப்போடும் உரிமையே இல்லாததுபோல் ஒரு நிலைமை வந்தாலும் வரலாம். இதற்கு முதன்மையான காரணம் SIR.
கடந்த ஜனவரி மாதம் எடுத்த அந்த கணக்கெடுப்பில் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் நம் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாருக்குமே இந்த ஓட்டு போட்டு உரிமையே இல்லை.
சிறப்பு தீவிர திருத்த படிவத்தை நாம் பூர்த்தி செய்து, பி.எல்.ஓ.விடம் கொடுக்க வேண்டும். அதை தேர்தல் ஆணையம் சரிபார்க்கும். அதன் பிறகு வாக்காளர் பட்டியலை வெளியிடுவார்கள். அந்த வாக்காளர் பட்டியலில் நமது பெயர் இருக்க வேண்டும். அப்போது தான் நாம் ஓட்டு போட முடியும்.
மேலும் புதிய வாக்காளர்களுக்கு Form-6 என்று ஒன்று இருக்கிறது. அதை பூர்த்தி செய்து, சம்மந்தப்பட்ட அலுவலத்தில் நேரடியாக கொடுக்க வேண்டும். அதற்கான ஆதாரங்களை பத்திரமாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். BLO க்களின் போன் நம்பரை கூட எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
SIR மேல டவுட்
6 கோடியே 36 லட்சம் வாக்காளர்களுக்கு எப்படி ஒருவர் விடாமல் ஒரே மாதத்தில் அந்த From கிடைக்கும். நீங்கள் வரும் போது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு போய் விட்டால் என்ன செய்வது. நீங்க வருவீர்கள் என்பதற்காக வேலையெல்லாம் விட்டு விட்டு வீட்டிற்கு உள்ளேயே உட்காந்திருக்க வேண்டுமா? அப்படி யென்றால் இதில் முக்கியமாக பாதிக்கப்பட போவது உழைக்கின்ற மக்கள், ஏழைகள், வேலைக்கு போகும் பெண்கள். இவங்களுக்கு யார் சரியான அந்த பதிலை சொல்வது.
நியாயமான SIR என்றால் இறந்து போனவர்கள் போலி வாக்காளர்களை நீக்கலாம். ஏற்கனவே ஓட்டு இருப்பவர்களுக்கு எதற்காக SIR என்ற பெயரில் இவ்வளவு குழப்பங்கள் என்பதுதான் கேள்வி. புதிதாக வரும் வாக்காளர்களையோ அல்லது ஓட்டுரிமை இல்லாதவர்களையோ சேர்த்துக் கொண்டால் போதாதா? கடந்த 2021, 2024 தேர்தலில் ஓட்டு போட்டவர்கள் கூட இப்போது புதிதாக பதிவு செய்ய வேண்டும் என்றால் ஏன் இப்படி ஒரு குழப்பம் என்பது தான் கேள்வி . இதனால் தான் நாங்கள் எஸ் ஐ ஆர் ஐ எதிர்கிறோம்.
புதிதாக சில குற்றச்சாட்டுகள் வர ஆரம்பித்துள்ளது. தவெக தோழர்களுக்கு SIR பார்ம் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். இதை யார் செய்கிறார்கள் என்பதை நான் சொல்லி தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்று அவசியம் இல்லை. இப்போது இருக்கும் ஆட்சியாளர்கள் அவங்களுக்கு கை பாவையாக இருக்கும் சில பேர் இதை செய்ய ஆரம்பித்துள்ளனர் என நடிகரும், தவெக தலைவருமான விஜய் குற்றம் சாட்டி உள்ளார்.
