மொழிப் போர் தியாகிகளுக்கு ’விசில்’ ஒலியுடன் வீரவணக்கம் செலுத்திய விஜய்

Published On:

| By Mathi

Vijay Jan25

மொழிப் போர் தியாகிகளுக்கு தவெக தலைவர் விஜய் இன்று ஜனவரி 25-ந் தேதி மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினார்.

மாமல்லபுரத்தில் தவெகவின் மாநில, மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்துக்கு வருகை தந்த விஜய்க்கு, அக்கட்சியின் சின்னமான ‘விசில்’ ஊதி நிர்வாகிகள் வரவேற்றனர்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து இக்கூட்ட மேடையில் அமைக்கப்பட்ட மொழிப் போர் தியாகிகளின் உருவப் படங்களுக்கு விஜய் மற்றும் தவெக நிர்வாகிகள் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர். அப்போதும் கூட்ட அரங்கில் இருந்து விசில் ஒலி இடைவிடாமல் ஒலித்து கொண்டிருந்தது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share