மழை, வெள்ள பாதிப்பு: விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மருத்துவ முகாம்!

Published On:

| By Selvam

vijay makkal iyakkam medical camp

vijay makkal iyakkam medical camp

சென்னையில் டிசம்பர் 14-ஆம் தேதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.

மிக்ஜாம் புயல் பாதிப்பிலிருந்து சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்கள் படிப்படியாக மீண்டு வருகிறது. இந்தசூழலில் நடிகர் விஜய், தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு முன்னெடுக்கும் மீட்பு பணியில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

அதன்படி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், பொதுமக்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள், உணவு வழங்குதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு டிசம்பர் 14-ஆம் தேதி சென்னையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று (டிசம்பர் 12) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“மிக்ஜாம் புயல் மழை காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் நலனை பாதுகாக்கும் வகையிலும், காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் வருகின்ற 14.12.2023 அன்று காலை 8.05 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற உள்ளது.

வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய பகுதிகளில் 25 இடங்களில் பல்துறை மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்க உள்ள இம்மருத்துவ முகாம்கள் வழியாக குழந்தைகள், பெண்கள், முதியோர்களுக்கு நோய் தடுப்பு மருந்துகள், மாத்திரைகள் மற்றும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.

பொதுமக்களின் நலன் காக்கும் இம்மருத்துவ முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கோவை நகை திருட்டு… கொள்ளையனை பிடித்தது எப்படி?: துணை காவல் ஆணையர் விளக்கம்!

பேரன்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி…. திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!

கதை வேண்டாம்… காங்கிரஸ் போதும் : மோடி கிண்டல்!

டிரெண்டிங்கில் “ராவணமகன்”!

vijay makkal iyakkam medical camp

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share