விஜய் வேட்டையாட வரும் சிங்கம் இல்லை வேடிக்கை காட்ட வரும் சிங்கம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (செப்டம்பர் 11) அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே நிலவும் கருத்து வேறுபாடுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சீமான் நான் பாமகவில் இருந்தவன். இது ஒரு பெரிய பிரச்சனை கிடையாது. இது ராமதாஸ் அன்புமணிக்கு இடையே உள்ள தனிப்பட்ட பிரச்சனை. இருவரும் சேர்ந்து பேசி பிரச்சனையை சரி செய்து கொள்வார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் விஜய்யின் அரசியல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த சீமான், ரோட் ஷோ எல்லாம் மக்கள் சந்திப்பு கிடையாது. மக்களிடம் நேரடியாக சென்று நிற்பது தான் உண்மையான மக்கள் சந்திப்பு. ஆனால் விஜய் அவ்வாறு மக்களை சந்திக்கவில்லை.
ஒரு நட்சத்திர பிரபலம் என்றால் வாக்குகள் கேட்டு வருவீர்களா.. விஜய் வேட்டையாட வரும் சிங்கம் அல்ல வேடிக்கை காட்ட வரும் சிங்கம் என்று விமர்சித்த சீமான் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் வாக்குகள் எண்ணப்படும் போதுதான் விஜய்யின் உண்மையான செல்வாக்கு என்ன என்பது தெரியும் என்று சவால் விடுத்தார்.
