தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில், தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாகத் தவெக தலைவர் விஜய் அவர்களை நேரில் அழைத்து விருது வழங்கிப் பாராட்டி வருகிறார்.
முதல் கட்டமாக கடந்த மே 30-ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது. இதனையடுத்து, இரண்டாவது கட்ட விழா மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டனில் இன்று (ஜூன் 4) நடைபெற்று வருகிறது. vijay honours school students

இதில், ராமநாதபுரம், ஈரோடு, கரூர், தஞ்சாவூர், தருமபுரி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில், விஜய் சான்றிதழும் ஊக்கத்தொகையும் வழங்கி கெளரவித்து வருகிறார்.
கடந்த மே 30-ஆம் தேதி அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய விஜய், “நீட் மட்டும்தான் உலகமா? நீட்டை தாண்டி இந்த உலகம் ரொம்ப பெரியது.
அதில் நீங்க சாதிக்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கு. தேர்தலில் இதுவரை ஊழலே செய்யாதவங்க யாருன்னு பார்த்து அவர்களை தேர்வு செய்யுங்கள். அதுதான் உங்கள் கடமை” என்று தெரிவித்திருந்தார். vijay honours school students