டிஜிட்டல் திண்ணை: கதவை இழுத்து சாத்திய விஜய்.. ஆட்டத்தை ஜரூரா ஆடும் அமலாக்கத் துறை.. அடுத்தது யார்?

Published On:

| By Minnambalam Desk

வைஃபை ஆன் செய்ததும், “சொன்னபடியே சொல்லிட்டாரே எடப்பாடி” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

என்ன சொன்னோம்? எதை சொல்லிட்டார் எடப்பாடி?

ADVERTISEMENT

நாம நேற்று டிஜிட்டல் திண்ணை யூடியூப் வீடியோவில், ” அதிமுக தரப்புல, தவெகவுடன் கூட்டணி வைப்பது பற்றி என்ன நினைக்கிறாங்கன்னு விசாரிச்சோம்.. தேவை இல்லாம யாரையும் வளர்த்துவிட்டா நாம நாளைக்கு சங்கடப்படும்னு சொல்லி ஒரே வார்த்தையில் புல்ஸ்டாப் வைத்திருக்கிறாராம் எடப்பாடி.. விஜய் நம்ம கூட கூட்டணிக்கு வந்தா நல்லா இருக்கும்னு ஆசைப்படும் சீனியர்களிடம்தான் இதை சொல்லி இருக்கிறார் இபிஎஸ். மேலும் நாமதான் ஆட்சி அமைக்கிறோம்.. நாம ஆட்சி அமைச்சுட்டா விஜய்யும் ஒரு வழிக்கு வந்துருவாரு.. திமுகவிலும் நிறைய பேரு அதிருப்தியில் இருக்காங்க.. அவங்க அதிமுகவுக்கு கூட வரவாய்ப்பிருக்கு.

அப்படி இருக்கும் போது விஜய்க்காக அதிமுக காத்திருக்கிறது என்கிற பிம்பத்தை ஏன் உருவாக்கனும்? இப்படி எல்லாம் தேவையே இல்லாம வளர்த்துவிட வேண்டாமே.. இந்த முறை முக்குலத்தோர் வாக்குகள் நமக்கு திரும்ப வந்துரும்.. அதேபோல அதிமுக உடைஞ்சு போச்சுன்னு சொல்ற வேலையே வேண்டாம்.. முக்குலத்தோர் வாக்குகள் நமக்கு திரும்ப வந்துடும்.. அதனால
ஓபிஎஸ், டிடிவி பேசுறதை பற்றி கவலைப்பட வேண்டாம்.. முக்குலத்தோர் வாக்குகளை நயினார் நாகேந்திரன் நம்ம கூட்டணிக்கு கொண்டு வருகிற வேலைகளில் ஈடுபட்டிருக்கிறாரு.. அதுவும் நமக்கு கை கொடுக்கும்.. இதை எல்லாம் கூட்டி கழிச்சு பார்த்தா நம்மதான் ஆட்சி அமைக்கிற மாதிரி சூழ்நிலையே இருக்கு.. அதனால கவலையே படாதீங்கன்னு நம்பிக்கையா சொல்றார் எடப்பாடி
” என விரிவாகவே சொல்லி இருந்தோம்..

ADVERTISEMENT

ஆமா.. இன்னைக்கு எடப்பாடி என்ன சொல்லி இருக்கிறாரு?

நாம நேற்று சொன்ன விஷயங்கள் அத்தனையையுமே எடப்பாடி இன்று ஓபனாகவே பிரஸ் மீட்டில் சொல்லி இருக்கிறார்..

ADVERTISEMENT

“தென் மாவட்டத்தில் அதிமுக பலமில்லைன்னு நீங்க மீடியாதான் சொல்றீங்க.. துரோகிகளால்தான் கடந்த முறை அதிமுக தோல்வியைத் தழுவியது.. சேவல் சின்னத்துல போட்டியிட்ட காலத்திலேயே ஜெயிச்ச தொகுதிகளில் அதிமுக போன முறை தோற்க துரோகமும் குழிபறிப்புகளும்தான் காரணம்.. இந்த முறை அதிமுக தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும்” என சொல்லி இருக்கிறார் எடப்பாடி.

அதேபோல அதிமுக- தவெக கூட்டணி விஷயத்துக்கும் கறாரா முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் எடப்பாடி.

நமது மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் ஏற்கனவே, தவெக- அதிமுக- பாஜக ‘நகர்வுகள்’ பற்றி பலமுறை குறிப்பிட்டிருக்கிறோம்.

அதில், கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து விஜய்யுடன் பேசுவதற்கு அமித்ஷா முயற்சித்தார்; இதற்காக பிஎல் சந்தோஷ், விஜய் தரப்புடன் பேசிப் பார்த்தார். ஆனால், ‘அமித்ஷாகிட்ட நான் பேசலை’ன்னு விஜய் சொல்லிவிட்டார் என பதிவு செய்திருந்தோம்.

அமித்ஷாவிடம் விஜய்யை பேச வைக்க ஜூடிசியல் கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் விஜய் தரப்புடன் பேசிகிட்டே இருக்காங்க எனவும் சொல்லி இருந்தோம்.

அத்துடன், “பாஜகவை கடுமையாக விமர்சித்தும் கூட பாஜகவின் பி டீம்னுதான் முத்திரை குத்துறாங்க.. விமர்சிக்கிறாங்க.. இப்ப பாஜக கூட்டணிக்கே போயிட்டா, பத்தோடு பதினொன்று என்கிற நிலைக்கு போயிடுவோம்னு தயங்குகிறார்.. அதனாலதான் அமித்ஷாகிட்ட பேசவும் மறுத்துகிட்டே இருக்கிறார் விஜய்” என்கிற தகவலையும் சொல்லி இருந்தோம்.

அதேபோல, கரூர் சம்பவத்துக்குப் பின் ஆதவ் அர்ஜூனாவும் அருண்ராஜூம் விஜய்க்கு சொல்லாமலேயே, அதிமுகவுடன் பேச்சுவார்த்தைக்கு முயற்சித்தனர். இந்த பேச்சுவார்த்தை முயற்சியை எடப்பாடி தரப்பு ரசிக்கவில்லை.. முதலில் விஜய் என்ன சொல்றாருன்னு சொல்லுங்க என தட்டி கழித்தது எடப்பாடி தரப்பு.

மேலும்,”விஜய்யால தனித்து கட்சி எல்லாம் நடத்த முடியாது.. கடைசிநேரத்துல நம்ம காலில்தான் வந்து விழுவாங்க” என எடப்பாடி கழற்றிவிடுவதையும் சொல்லி இருந்தோம்.

தற்போது நாம் சொன்ன அனைத்தையும் தவெகவும் எடப்பாடியும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்திருக்காங்க.

தவெக நிர்மல்குமார் நேற்று பிரஸ்மீட்டில், கொள்கை எதிரி பாஜக; அரசியல் எதிரி திமுக.. நாங்க எந்த கட்சியுடனும் கூட்டணி பற்றி பேசவில்லை என சொல்லி இருந்தார்.

அதேபோல எடப்பாடி பழனிசாமியும், “தவெகவுடன் அதிமுக இதுவரை கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.. அதே மாதிரி தவெக அண்ணா திமுக கட்சியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தலை.. நீங்களாக வெளியிடும் செய்திகளுக்கு நாங்கள் பொறுப்பு இல்லை” எனவும் இன்றைய பிரஸ்மீட்டில் திட்டவட்டமாகவே சொல்லி இருக்கிறார்.

எடப்பாடி பிரஸ் மீட் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் விஜய் கவனத்துக்கும் உடனே கொண்டு செல்லப்பட்டதாம்.. அப்போது, “டெல்லியில் இருந்து அமித்ஷா தரப்பில் பேச முயற்சித்த போதே நாம எதுவும் சொல்லலை.. அப்பா மூலமாக முயற்சித்தாங்க.. நம்மைப் பொறுத்தவரைக்கும் நாமதான் முதல்வர் வேட்பாளர்.. இதை ஏற்றுக் கொண்டு வருகிற கட்சிகளுடன் கூட்டணிங்கிறதுதான் நிலைப்பாடு.. கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்கிறதாலேயே நாம பயந்துகிட்டு கூட்டணிக்கு போவோம்னு நினைச்சா நாம என்ன செய்யுறது.. நம்ம மேல என்ன தப்பு இருக்கு? நாம ஏன் பயப்படனும்? நம்மை ஏத்துகிட்டு வருகிற கட்சிகளோடதான் நாம கூட்டணி” என தமது சகாக்களிடம் மீண்டும் திட்டவட்டமாக சொல்லி இருக்கிறார் விஜய்.

என்னய்யா அமலாக்கத்துறை ஆட்டம் ஆரம்பிசிடுச்சு போல..

சட்டப்பேரவை தேர்தல் நேரத்துல அமலாக்கத்துறை களமிறங்கும்னு சொல்லப்பட்டுகிட்டே இருந்துச்சு. மொத்தம் 5 அமைச்சர்களை குறிவைத்து இப்ப அமலாக்கத்துறை களமிறங்கி இருக்காம்.. அதுல ஒன்னுதான் அமைச்சர் கே.என்.நேருவின் நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமன விவகாரம் தொடர்பான அமலாக்கத்துறை கடிதம்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய அமலாக்கத்துறை அதிகாரிகள், “தேர்தல் நேரத்துல திமுகவோட ‘செலவு’ பலத்தை கண்ட்ரோல் செய்யனும்னுதான் டெல்லி மேலிடம் உத்தரவிட்டிருக்காங்க.. அதுக்குதான் இப்போதைக்கு நகராட்சி நிர்வாக பணி நியமன முறைகேடு பற்றி டிஜிபிக்கு கடிதம் அனுப்பி இருக்கிறோம்.. இந்த கடிதத்தை அடிப்படையாக வைத்து விஜிலென்ஸ் எப்.ஐ.ஆர் போட்டா நாங்க உள்ளே வருவோம்.. எப்.ஐ.ஆர் போடாம இருந்தாலும் கோர்ட் மூலமாக சில மூவ் நடக்கும்.. அப்ப எப்.ஐ.ஆர் போடுவாங்க.. நாங்க கையில் எடுப்போம் என்று சொன்னதுடன் அடுத்ததாக அதிர்ச்சி தகவலையும் ஷேர் செய்தனர்.

அதாவது, “தமிழகத்தில் தேர்தல் வசூல் வேட்டையில் ஆளும் தரப்பு படுஜோராக இறங்கி இருக்குன்னு எங்களுக்கு தகவல்கள் வந்துகிட்டே இருக்கு… குறிப்பாக கிரஷர் குவாரி ஓனர்களிடம் இருந்து பெரும்பாலான இடங்களில் வசூல் ஜரூராக நடக்குதுன்னு திமுகவிலேயே ஒருதரப்பினர் தகவல் அனுப்புறாங்க.. இதை எல்லாம் அலசி ஆராய்ந்துகிட்டு இருக்கோம்.. எல்லாம் ‘ஸ்டிராங்காக’ கிடைத்த உடன் அங்கேயும் ஆட்டத்தை நாங்களும் ஜரூராகவே தொடங்குவோம்” என அமலாக்கத்துரை சோர்ஸ்கள் சொன்னதை டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

Digital Thinnai: கூட்டணிக்கு "நோ"சொல்லும் EPS...உருவாகும் "புது டீம்" | Vijay | MKStalin | KNNehru
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share