வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘கோட்’ படத்தின் இரண்டாவது பாடல் நாளை ( ஜூன் 22) வெளியாக உள்ளது.
நடிகர் விஜய் அரசியல் பிரவேசத்தை அறிவித்துள்ள நிலையில், ‘கோட்’ திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார்.
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரஷாந்த், பிரபு தேவா, வைபவ், மீனாக்ஷி, சதுர்வேதி, சினேகா, மோகன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
செப்டம்பர் 5-ஆம் தேதி ‘கோட்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் பாடலான ‘விசில் போடு’ கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியானது. விஜய் பாடிய இப்பாடல் அவரது ரசிகர்கள் கொண்டாடினாலும், ஜெனரல் ஆடியன்ஸ் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இந்தநிலையில், நாளை விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டாவது பாடலான ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில், நடிகர் விஜய் தனது குடும்பத்துடன் மழையில் குடை பிடித்து செல்வது போன்று இருக்கிறது.
நாளை மாலை 6 மணிக்கு இப்பாடல் வெளியாக உள்ளது. ‘சின்ன சின்ன கண்கள்’ பாடலையும் விஜய் தான் பாடியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கள்ளச்சாராய மரணம்… ஆளுங்கட்சி புள்ளிகளுக்கு தொடர்பு: அன்புமணி குற்றச்சாட்டு!
‘கோட்’ சாட்டிலைட் உரிமம்… ‘சன்’னிடம் இருந்து தட்டிப்பறித்த ‘ஜீ’… பின்னணி என்ன?