ரசிகர்களுக்கு விருந்தளிப்பாரா இந்த ‘வெங்கட் பிரபு ஹீரோ’ ?!
‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ பட விளம்பரங்கள்ல ஒரு டைரக்டர் பெயர் வர்ற இடங்கள்ல ‘ஏ வெங்கட்பிரபு ஹீரோ’ என்றே குறிப்பிடுறாங்க.
சில இயக்குனர்கள் தங்களோட படம் என்று சொல்ல ‘எ பிலிம் பை’ மாதிரி சில வார்த்தைகளைப் பயன்படுத்துவாங்க. அப்படி வெங்கட்பிரபு தனது படங்களோட ட்ரேட்மார்க்கா அந்த இடத்தைப் பயன்படுத்துவாரு.
தனித்துவமா தெரியறதோட, அந்த படத்தோட சாராம்சமாகவும் அது இருக்குற மாதிரி பார்த்துக்குவாரு.
‘சென்னை 600028’ படத்துல ‘எங்க ஏரியா உள்ளே வராதே’ என்பது டேக்லைனா இருந்துச்சு. ரெண்டாவது படமான ’சரோஜா’வுல கூட ‘எ வெங்கட்பிரபு மூவி’ என்றே குறிப்பிட்டிருந்துச்சு.
மூணாவது படமான ‘கோவா’வுல கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமேன்னு ’எ வெங்கட்பிரபு ஹாலிடே’ என்று குறிப்பிட்டாங்க. அந்த வழக்கம் ஒரு தொடர்கதையாக மாறி ’மங்காத்தா’வுல அது ‘எ வெங்கட்பிரபு கேம்’னு ஆச்சு.
அதுக்கப்புறம் இயக்குனர் பார்த்திபன் மாதிரி, அந்த வார்த்தைக்காகவே தனியா யோசிக்க ஆரம்பிச்சார் வெங்கட்பிரபு.
’பிரியாணி’ படம் ‘எ வெங்கட்பிரபு டயட்’னு ஆக, ’மாசு என்கிற மாசிலாமணி’ படம் ’எ வெங்கட் பிரபு சிக்சர்’னு ஆச்சு.
சென்னை 600028’ செகண்ட் இன்னிங்ஸ்’ல ‘எ வெங்கட்பிரபு ரீயூனியன்’னும், மாநாடு படத்தில் ‘எ வெங்கட்பிரபு பாலிடிக்ஸ்’ னும், ‘மன்மதலீலை’யில ‘எ வெங்கட்பிரபு குயிக்கீ’ன்னும், ‘கஸ்டடி’யில் ‘எ வெங்கட்பிரபு ஹண்ட்’ அப்படின்னும், இன்னும் ரிலீஸாகத ‘பார்ட்டி’யில ‘எ வெங்கட்பிரபு ஹேங்ஓவர்’னும் அந்த வார்த்தைகளை தந்திருக்கார் வெங்கட்பிரபு.
அதோட தொடர்ச்சியா, ‘தி கோட்’ படத்துல ‘எ வெங்கட்பிரபு ஹீரோனு’ வந்து நிற்கிறார். இந்த வார்த்தையே, படத்துல விஜய்யோட ஹீரோயிசம் எந்த அளவுக்கு இருக்கும்னு புரிய வைக்கும்.
சரி, இதுக்கு முன்னால வெங்கட்பிரபு இயக்கின படங்களோட ஹீரோக்கள் எப்படி இருந்தாங்கன்னு பார்க்கலாமா?
’சென்னை 6000028’ படத்துல ஹீரோன்னு தனியா யாரையும் சொல்லிட முடியாது. அதுதான் அந்த படத்தின் சிறப்பே..!
அடி வாங்குற ‘ஷார்க்ஸ்’ கிரிக்கெட் டீம்ல ஜெய், சிவா, அரவிந்த் ஆகாஷ், பிரேம்ஜி, நிதின் சத்யா, விஜய் வசந்த், அஜய்ராஜ்னு ஒரு கும்பலே இருக்கும். எதிர் டீமான ‘ராயபுரம் ராக்கர்ஸ்’ல இனிகோ பிரபாகரன்ல தொடங்கி சுமார் 20 பேராவது ‘நான் தான் ஹீரோ’ன்னு திரையில நம்மை கடந்து போவாங்க.
இது போக இளவரசு, சம்பத்ராஜ்னு சில பேரு ‘ஓல்டு இஸ் கோல்டு’ன்னு சொல்ற மாதிரி வந்து போயிருப்பாங்க. அந்த படத்துல ‘பில்டப்’ இருந்த அளவுக்கு ‘ஹீரோயிசம்’ இருக்காது.
’இந்த வம்பு எதுக்கு’ ன்னு ரெண்டாவது படமான சரோஜாவுல சிவா, எஸ்.பி.பி.சரண், வைபவ், பிரேம்ஜி நாலு பேரை மட்டும் ஹீரோக்களாக காட்டியிருந்தார் வெங்கட்பிரபு. ’நிமிர்ந்து நில்’ பாட்டுல அவங்களை தூள் கிளப்புற ஹீரோக்களா காண்பிச்சவரு, அடுத்த நொடியே அவங்களை ‘டம்மி பீஸ்களா’ மாத்தியிருப்பாரு.
ஜெய், வைபவ், பிரேம்ஜி கேரக்டர்களை மையப்படுத்திய படம் ‘கோவா’. அதுலயும் கூட அவங்களோட கேரக்டர் ஆர்க் ‘பேஸ்மெண்ட் வீக் பில்டிங் ஸ்ட்ராங்’ அப்படின்னு சொல்ற மாதிரி அமைஞ்சிருக்கும்.
‘மங்காத்தா’ படத்துல ஹீரோ யாருன்னு கேட்கறது ‘டேஞ்சரான’ விஷயம். ஆனா, அதுல அஜித்தும் சரி, அர்ஜுனும் சரி, வில்லன்கள் தான் என்று ஊருக்கே தெரியும்.
அந்த ஒரு காரணத்தால வைபவ், அஸ்வின், பிரேம்ஜி, மகத், அரவிந்த் ஆகாஷ் மட்டுமல்லாமல் சுப்பு பஞ்சுவையும் அந்த படத்தோட ஹீரோக்களா பார்க்க வேண்டியிருக்குது.
தமிழ் சினிமாவுல வரையறுக்கப்பட்ட மாஸ் ஹீரோ, வில்லன் வரையறைகளை உடைச்ச படம்கறதால ‘மங்காத்தா’ ஒரு தனி ரகம்.
அதே வெங்கட்பிரபு ‘பிரியாணி’ படத்துல கார்த்தியை மன்மதராஜாவாக காட்டினார்.
‘மாசு என்கிற மாசிலாமணி’யில் சூர்யாவை ‘சூப்பர்ஹீரோ’வாக காட்டியிருந்தார்.
ஆனா, அடுத்து வந்த ‘சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ்’ஸில் வழக்கம்போல பெரும்பட்டாளத்தையே ஹீரோக்களாக களமிறக்கினார் வெங்கட்பிரபு.
ஜெய்யோட திருமண விழாவுக்கு போகிற விஜய் வசந்த், நிதின் சத்யா, சிவா, அஜய்ராஜ் எல்லாம் குடும்பஸ்தர்களாக நிற்க, வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், மகத், அபிநய்னு இன்னொரு கும்பல் ‘பேச்சுலர்களாக’ காட்சி தந்தது நம்மை அதிர்ச்சியடைய வச்சது.
’மாநாடு’ படத்தை பொறுத்தவரை சிம்புதான் ஹீரோன்னாலும், அவரோடு செத்து செத்து பிழைத்த எஸ்.ஜே.சூர்யாவும் அவருக்கு இணையாகப் படம் முழுக்க வந்தார்.
அடுத்து வந்த ‘கஸ்டடி’யில் நாகசைதன்யா ஹீரோ. ஆனால் அந்தப் படத்துல நடிச்ச அரவிந்த் சாமி, ராம்கி, சரத்குமாரும் அவரோட அந்தஸ்துல பங்கு கேட்டு திரையை ஆக்கிரமிச்சாங்க. அப்படியிருந்தும், அந்த படம் நம்ம நினைவுல நிக்காம போனது.
இன்னும் வெளிவராமல் இருக்கிற வெங்கட்பிரபுவோட ‘பார்ட்டி’யில ஜெய், சிவா, சத்யராஜ், ஜெயராம், ஷாம் என்று ஒரு பட்டாளமே ஹீரோக்களாக நடிச்சிருக்காங்க.
மேற்சொன்ன விஷயங்கள்ல இருந்தே, பெரும்பட்டாளத்தை ஹேண்டில் பண்றதுல வெங்கட்பிரபு கில்லின்னு தெரிஞ்சிருக்கும்.
அந்த வரிசையில ‘கில்லி’யான விஜய் படத்துல தன்னோட பாணியில பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், ஜெயராம், வைபவ், பிரேம்ஜினு பெரும்படையை தலைகாட்ட வச்சிருக்கார் வெங்கட்பிரபு. இதுல வில்லனா வர்றது நம்ம ‘எவர்க்ரீன்’ மோகன்.
இந்த ‘காஸ்ட்டிங்’ தான் ‘தி கோட்’ படத்தின் பெரும்பலம். விஜய்யோட படத்துல இவங்க வர்ற சீன்கள நாம விரல்விட்டு எண்ணிடலாம். ஆனா, அதுல ஒரு துணை பாத்திரமா அவங்க வர்றதும், அது சரியா அமையறப்போ படத்தோட உள்ளடக்கம் செறிவானதாக மாறுறதும் பெரும்பலமா அமையும்.
அது நடந்தா ரசிகர்களுக்கு தியேட்டர்கள்ல கிடைக்குற உற்சாகம் பிரமிக்கக் கூடியதாக இருக்கும். கூடவே ‘டபுள் ரோல்’ல விஜய் வர்றப்போ, அந்த உற்சாகம் சிகரத்தை தொடும். அந்த உற்சாக வெள்ளத்தை அணை போட்டுத் தடுக்க யாரால முடியும்?!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– உதயசங்கரன் பாடகலிங்கம்
பியூட்டி டிப்ஸ்: புதிதாக ஹேர் டை அடிக்கப் போறீங்களா… இந்த விஷயங்களை மறந்துடாதீங்க!
டாப் 10 செய்திகள் : புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி முதல் விஜய் படம் ரிலீஸ் வரை!