ADVERTISEMENT

இந்த பொங்கல் தளபதி பொங்கல்: G.O.A.T படக்குழு அறிவிப்பு!

Published On:

| By Selvam

நடிகர் விஜய் தளபதி 68 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு “THE GREATEST OF ALL TIME” (G.O.A.T) என டைட்டில்  வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.

ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. G.O.A.T படம் ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இதில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிகர் பிரசாந்த், நடிகர் பிரபு தேவா,நடிகர் மோகன், நடிகை மீனாட்சி சவுத்ரி, நடிகை சினேகா, நடிகை லைலா, நடிகர் அஜ்மல் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் வெங்கட் பிரபுவின் பாய்ஸ் கேங்கும் G.O.A.T படத்தில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா G.O.A.T படத்திற்கு  இசையமைக்கிறார்.

புத்தாண்டை முன்னிட்டு G.O.A.T படத்தின் இரண்டு போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது.

ADVERTISEMENT

G.O.A.T படம் “A Venkat Prabhu Hero” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.G.O.A.T படம் ஒரு Sci-Fi கதைக்களத்தில் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது. G.O.A.T படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் ரசிகர்களை சந்தித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு G.O.A.T அப்டேட்ஸ் வரும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து கொண்டிருந்த நிலையில் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் தயாரிப்பாளர் அர்ச்சனாவை குறிப்பிட்டு “இந்த பொங்கல் G.O.A.T பொங்கல் ஆக இருக்கும், அர்ச்சனா நீங்க என்ன சொல்றீங்க?” என்று பதிவிட்டார்.

ADVERTISEMENT

வெங்கட் பிரபுவின் பதிவிற்கு, “கண்டிப்பாக இது GOAT பொங்கல், தளபதி பொங்கல் தான்” என்று அர்ச்சனா பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் நிச்சயமாக GOAT படத்தின் புது அப்டேட் வெளியாக போகிறது என்று கொண்டாட தொடங்கிவிட்டனர் .

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‘அதிமுக இடத்தில்’ நாம் தமிழர்: பொதுக்குழுவில் நடந்தது என்ன?

பனி மூட்டமா? புகை மூட்டமா? – அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share