கோட் பட முதல் நாள் வசூல்: விஜய் ரசிகர்கள் ஷாக்!

Published On:

| By christopher

vijay GOAT film first day collection

விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள கோட் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியான நிலையில் முதல் நாளில் ரூ. 126.32 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய்யின் ‘தி கோட்’ திரைப்படம் நேற்று (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு இடையே வெளியானது.

முதல் காட்சியில் இருந்தே படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வர, பல திரையரங்குகள் ஹவுஸ்புல் ஆக நேற்று ஓடியது.

மேலும் படத்தில் இயக்குநர் வெங்கட்பிரபுவின் அசத்தலான திரைக்கதையும், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம் உள்ளிட்டோரின் பங்களிப்பும் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில் கோட் திரைப்படம் நேற்று முதல் நாளில் ரூ. 126.32 கோடி வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது.

Image

இதன்மூலம் விஜயின் முதல் நாள் வசூல் சாதனையில் அவரது முந்தைய படமான லியோ ரூ.148.5 கோடியுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

ஓடிடி ரிலீஸ் பிரச்சனையால் வட இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் கோட் படத்தின் இந்தி வெர்சன் வெளியாகாதது,

விஜயின் படத்திற்கு நல்ல வரவேற்பை பெற்று தரும் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் ஏற்பட்ட கனமழை வெள்ள பாதிப்பும்  கோட் படத்தின் முதல் நாள் வசூல் குறைவுக்கு காரணமாக கூறப்பட்டுள்ளது.

அதே வேளையில், இந்த சூழ்நிலையிலும் கோட் திரைப்படம் முதல் நாள் வசூல் ரூ.125 கோடி தாண்டியுள்ளதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் எப்போது? : சென்னை கமிஷனர் பதில்!

ஓர் ஆசிரியர் எப்படி வாழ வேண்டும்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share