வைஃபை ஆன் செய்ததும், “சும்மாவே அதிரும்.. இப்ப சலங்கை கட்டிவிட்ட மாதிரி..” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
எந்த கட்சி விவகாரம்யா?
விஜய்யின் தவெகதான்.. தவெகவுக்கான தேர்தல் சின்னம் பத்தி செப்டம்பர் மாதம் டிஜிட்டல் திண்ணையில் விரிவாகவே எழுதி இருந்தோம்.
அதுல, “பொது சின்னமாக ‘ஆட்டோ’வைத்தான் கேட்கலாம்னு விஜய் ஆலோசிச்சுகிட்டு இருந்தாரு.. அப்புறமா. விசில்’ சின்னம் கிடைச்சா எப்படி இருக்கும்? எப்படி ரீச் இருக்கும்? மக்கள் கிட்ட ஈசியாக கொண்டு போய் சேர்க்க முடியுமா? என்றெல்லாம் ரொம்பவே சீரியசாகவே கேட்டுகிட்டு இருக்கிறாராம்.. புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட சகாக்களிடம் மட்டுமல்ல.. தமக்கு நெருக்கமான நண்பர்களிடமும் கூட விசில் சின்னம் எப்படி இருக்கும் என சீரியசாக கேட்கிறாராம்..” என நாம் சொல்லி இருந்தோம்.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி செங்கோட்டையனும் புஸ்ஸி ஆனந்தும் கூட, ‘சின்னம் வந்துருச்சு.. அருமையான சின்னம் நமக்கு கிடைச்சிருக்கு.. இப்பவே சொல்லமாட்டோம்.. உத்தரவு வந்த பின்ன சொல்லுவோம்’ என பேசி தவெகவினரை உற்சாகப்படுத்தி இருந்தாங்க..
இப்ப சின்னம் வந்துருச்சா?
ஆமாய்யா.. தேர்தல் ஆணையம் 2 நாட்களுக்கு முன்னாடி, விஜய் கேட்ட மாதிரியே ‘விசில்’ சின்னத்தை அலாட் செஞ்சிருச்சுன்னு நம்ம சோர்ஸ்கள் கன்பார்ம் பண்ணியிருக்காங்க .. சும்மாவே விசிலடிப்பதில் தவெக தொண்டர்களை மிஞ்ச முடியாது.. இப்ப விசில் சின்னமே கிடைச்சிருச்சே.. என்றபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.
