திருச்சி கிழக்கில் போட்டியிடுவதற்காக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (ஏப்ரல் 2) வேட்புமனு தாக்கல் செய்தார்.
சென்னையில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த விஜய் அங்கிருந்து பிரச்சார வாகனத்தில் சாலை பேரணியாக பாலக்கரையில் இருக்கும் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தார்.
எனினும் உடனடியாக வேட்புமனு தாக்கல் செய்யாமல், பிரச்சார வாகனத்தில் காத்திருந்த விஜய் தற்போது தேர்தல் அலுவலர் முத்து முருகேசபாண்டியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்வதற்காக புறப்பட்டுள்ளார் விஜய்.
ஏற்கனவே கடந்த மார்ச் 30ஆம் தேதி பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
