ADVERTISEMENT

கோவையில் விஜய்க்கு வந்த பயம்: மத்திய அரசிடம் திடீர் கோரிக்கை!

Published On:

| By Aara

Vijay fear in Coimbatore

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த ஏப்ரல் 26, 27 தேதிகளில் கோவைக்கு பயணம் மேற்கொண்டார். Vijay fear in Coimbatore

மாநாடு, மாவட்ட செயலாளர்கள் நியமனம், பொதுக்குழு கூட்டம் என கட்சியின் முக்கிய அடிப்படை நிகழ்வுகளுக்குப் பிறகு, விஜய் மேற்கொள்ளும் முதல் வெளி மாவட்ட பயணமாக கோவை பயணம் அமைந்தது. Vijay fear in Coimbatore

ADVERTISEMENT

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கோவை மண்டல தமிழக வெற்றிக் கழக பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி கருத்தரங்கம் 26, 27 தேதிகளில் கோவை குரும்பாளையத்தில் ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சிக்காக தான் 26-ஆம் தேதி சென்னையில் இருந்து தனி விமானத்தில் கோவை வந்தார் விஜய்.

ADVERTISEMENT

குலுங்கிய கோவை

விஜய் பகல் 12 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அன்று காலை 6 மணியிலிருந்து விமான நிலைய வாசலில் தமிழக வெற்றிக் கழகத்தினரும் பொதுமக்களும் விஜய்யை பார்க்க திரண்டனர்.

 Vijay fear in Coimbatore

விஜய்யை வரவேற்பதற்காக விமான நிலையத்துக்குள் செல்வதற்கு பயங்கர தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட நெரிசல் காரணமாக, விமான நிலையத்தின் பேரிக்கார்டுகள் தள்ளப்பட்டன.

ADVERTISEMENT

விமான நிலையத்திலிருந்து விஜய் தான் தங்க இருக்கிற ஹோட்டலுக்கு செல்கிற வழியில், எங்கும் கூட்டம் பிதுங்கி வழிந்தது. விஜய் வாகனத்தின் மேல் திடீரென குதித்து அவருக்கு வாழ்த்து சொல்லி சென்றனர். விஜய் வரும் வழியில் ஆங்காங்கே மொட்டை மாடிகளிலும் மரங்களிலும் தமிழக வெற்றி கழகத் தொண்டர்களும் கட்சி சாராத இளைஞர்களும் கூட சாகசம் காட்டிக் கொண்டிருந்தனர்.

முதல் நாள் இரண்டாம் நாள் என இரண்டு தினங்கள் இந்த பயிற்சி நடைபெற்றது.

பயிற்சி பெறுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பூத்கமிட்டி உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் க்யூ ஆர் கோடு வழங்கப்பட்டு, அதன் மூலமாகத்தான் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அதையெல்லாம் தாண்டி விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் அவரவர்களும் க்யூ ஆர் கோடுகளை தாங்களாகவே டூப்ளிகேட்டாக அச்சடித்து எடுத்துக்கொண்டு உள்ளே செல்ல முயன்றனர். Vijay fear in Coimbatore

மேலும், க்யூ ஆர் கோடு இல்லாமலேயே ஆயிரக்கணக்கானோர் அரங்கத்துக்குள் நுழைந்தனர்.
அவர்களைத் தடுத்து நிறுத்தவும் முடியாமல் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் முடியாமல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த தனியார் செக்யூரிட்டி ஏஜென்சியினர் திணறிப் போய்விட்டனர்.

இரண்டாம் நாள் கருத்தரங்கிலும் இதே நிலைதான். விஜய் எங்கெங்கு சென்றாலும் மக்கள் வெள்ளம் அவரை சுற்றி சுழற்றி அடித்தது.

 Vijay fear in Coimbatore

இட்டுக்கினு வந்து இட்டுக்கினு போறதுதான்…

பூத் பயிற்சி கருத்தரங்கத்தில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசும்போது, ‘எங்களுக்கு கட்டமைப்பு உள்ளிட்ட எல்லாமே இருக்கிறது. ஆனால், எங்கள் தலைவரை இட்டுக்குனு வந்து திருப்பி இட்டுக்குனு போறதுதான் பெரிய பிரச்சினையாக இருக்கிறது’ என்று அனுபவரீதியாக பேசினார்.

உண்மை அதுதான். பூத் கமிட்டி பயிற்சி கருத்தரங்கத்துக்குள் செல்வதற்குள் புஸ்ஸி ஆனந்த் பெரும்பாடு பட்டுவிட்டார். அவருடைய பேண்ட் கிழிந்து, அதில் கர்சிப்பை சுற்றி கட்டி இருந்தார்.

‘தம்பி எல்இடி மேல ஏறாதே… தம்பிகளா அங்க கரண்ட் போகுது பாரு அங்க போகாதீங்க’என்றெல்லாம் ஆனந்த் எச்சரிக்க… ஒரு கட்டத்தில் விஜய்யும் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு அறிவுரைகளை வழங்கினார். Vijay fear in Coimbatore

 Vijay fear in Coimbatore

இந்நிலையில், கோவை விசிட் முடித்து வந்த விஜய் இன்னமும் அதிர்ச்சி மீறாமல் இருக்கிறார் என்கிறார்கள் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகிகள்.

கைக்குழந்தைகளோடு தாய்மார்கள்

இதுகுறித்து அவர்களிடம் விரிவாக பேசினோம்.

“கோவைக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதல் பயணம் மேற்கொள்கிறார் என்பதால் 15 நாட்களுக்கு முன்பே மாநில நிர்வாகிகள் கோவை சென்று முக்கிய ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டார்கள்.

விமான நிலையத்திலிருந்து அவர் தங்குகிற ஹோட்டல், அங்கிருந்து கருத்தரங்கம் நடக்கும் இடத்துக்கு செல்கிற வழி என நிகழ்ச்சிகள் தெளிவாகத்தான் திட்டமிடப்பட்டன.

ஆனால், நாங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் கூட்டமும் பொதுமக்கள் கூட்டமும் விஜயை பார்க்க திரண்டது.

குறிப்பாக இளம் தாய்மார்கள் கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு சிறுவர்களை அழைத்துக் கொண்டு விஜய்யை பார்க்க வந்திருந்தார்கள்.

விமான நிலையத்திலிருந்து ஹோட்டல் செல்லும் போதும் அங்கிருந்து அந்த தனியார் பள்ளிக்கு செல்லும் போதும் விஜய் கண்ட காட்சிகள் அவருக்கு அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி விட்டன. Vijay fear in Coimbatore

 Vijay fear in Coimbatore

விஜய் பாதுகாப்பு

மேலும், விஜய் நிகழ்ச்சிக்கு போலீஸ் பாதுகாப்பு மிக மிகக் குறைவாகவே அளிக்கப்பட்டிருந்தது.

அதுவும் விஜய் தங்கி இருந்த ஹோட்டல் உரிமையாளர் போலீஸ் உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டதால், அந்த ஹோட்டல் வாசலில் 50 போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.

கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கோவை மாவட்ட எஸ்பி, மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்தார்கள். அப்போதும் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் பாதுகாப்பு ஒரு பேட்ரல் ஜீப் ஆகியவை மட்டும்தான் போலீஸ் தரப்பில் பாதுகாப்புக்காக செய்யப்பட்ட ஏற்பாடுகள்.

சும்மா சொல்லக்கூடாது அந்த இன்ஸ்பெக்டர் தலைமையிலான குழுவினரும் மிகக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

அட்ராசிட்டி மீடியாக்கள்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு விஜய் உத்தரவு!

விஜய் கோவை விமான நிலையத்தில் வந்து இறங்கியதிலிருந்தே மீடியா வாகனங்களின் தொல்லை தாங்க முடியவில்லை.

விஜய்யின் காருக்கு முன்பாகவும், பக்கவாட்டிலும் தங்களுடைய லைவ் செய்யும் கருவிகள் பொருத்தப்பட்ட வாகனங்களோடு டிவி சேனல்கள் ஒரு தனி அணிவகுப்பு நடத்தினார்கள். மீடியா வாகனங்கள் நிற்கும்போது விஜய் வாகனம் நிற்பதும் அவர்களுடைய வேகத்திற்கேற்றார் போல விஜய்யின் வாகனம் நகர்வதுமாகத்தான் இருந்தது. Vijay fear in Coimbatore

 Vijay fear in Coimbatore

இதைப் பார்த்த விஜய் முதல் நாள் நிகழ்ச்சி முடிந்த பிறகு ஹோட்டலுக்கு சென்றதும், ஆதவ் அர்ஜுனாவை அழைத்து, ‘ மீடியாக்கள் இப்படி பண்றாங்க? ஏதாவது விபத்து நடந்தா யார் பொறுப்பு ஏற்பது? உடனே மீடியாக்களிடம் இது பற்றி பேசுங்கள்’என்று கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து ஆதவ் அர்ஜுனா ஒவ்வொரு டிவி சேனல் தலைமைக்கும் தொடர்பு கொண்டு, ‘உங்களுடைய ஆர்வமும் ஈடுபாடும் எங்களுக்கு புரிகிறது. ஆனால், மீடியா வாகனங்களின் நெருக்கடியால் சின்ன சின்ன மைனர் விபத்துகளுக்கு முகாந்திரம் ஏற்பட்டுவிட்டது. தயவுசெய்து ஒத்துழைப்பு கொடுங்கள்’ என்று விஜய் சார்பாக பேசியிருக்கிறார்.

ஒரே நாளில் உதயநிதி- விஜய்

இந்த நிலையில், விஜய் கோவையில் இருந்த அதே 27-ஆம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் கோவை பயணம் மேற்கொண்டார். ஒட்டுமொத்த போலீசாரும் துணை முதலமைச்சர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் விஜய் நிகழ்ச்சியில் போலீஸ் பாதுகாப்பு இல்லை. Vijay fear in Coimbatore

 Vijay fear in Coimbatore

விஜய்க்கு தேவை கூடுதல் பாதுகாப்பு!

மாநகரமான கோவையிலேயே இவ்வளவு கூட்டம் என்றால், விஜய் அடுத்தடுத்து தமிழகம் முழுவதும் மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயணங்களில் அவருக்கு பாதுகாப்பு ரீதியான அச்சுறுத்தல் இன்னும் அதிகமாக இருக்கவே வாய்ப்புள்ளது.

இப்போது அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தாலும், அது போதவில்லை என்பதனையே கோவை சம்பவங்கள் காட்டுகின்றன.

எனவே, விஜய்க்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கக் கோரி மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பதற்கும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்” என்கிறார்கள்.

 Vijay fear in Coimbatore

போலீஸ் ரியாக்ஷன் என்ன?

விஜய்யின் கோவை விசிட் பற்றி போலீஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது, “அவர்கள் அரங்க கூட்டம் என்பதற்குத்தான் அனுமதியும் பாதுகாப்பும் கேட்டிருந்தார்கள். அதன்படி தான் வழங்கப்பட்டது.

மேலும், திமுக ஆட்சி காலத்தில் அதிமுகவின் மிகப்பெரிய நிகழ்வுகளுக்கும், அதிமுக ஆட்சிக்காலத்தில் திமுகவின் மிகப்பெரிய நிகழ்வுகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு மிக குறைவாக அளிக்கப்படுகிறது என்ற புகார் பொதுவாகவே நேரடியாக போலீசார் மீது சுமத்தப்படுகிறது.

ஆனால், மேலதிகாரிகளின் உத்தரவின் படி தான் போலீசார் இது போன்ற பாதுகாப்பு அளிக்கும் விஷயங்களில் செயல்பட முடியும். Vijay fear in Coimbato

உண்மையிலேயே விஜய் விசிட்டுக்கு கோவையில் திரண்ட கூட்டம் போலீசும் எதிர்பார்க்காதது விஜய்யும் எதிர்பார்க்காதது” என்கிறார்கள். Vijay fear in Coimbatore

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share