ஜவான் திரைப்படம் ரூ.1000 கோடி வசூலை பெற்றதற்கு அப்படத்தின் கதாநாயகன் ஷாருக்கானுக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளது வைரலாகி வருகிறது.
அட்லி இயக்கத்தில் உருவான ஜவான் திரைப்படம் கடந்த 7ம் தேதி வெளியாகி உலகளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது.
ஷாருக்கானுடன், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, சஞ்சய் தத் மற்றும் பிரியாமணி என பான் இந்தியா நட்சத்திரங்கள் இணைந்துள்ள இத்திரைப்படம் சமீபத்தில் பாக்ஸ் ஆபிசில் ரூ.1000 கோடி வசூலைத் தாண்டியுள்ளது.
இதன்மூலம் ஒரே வருடத்தில் இரண்டு முறை 1000 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்த முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஷாருக்கான்.
இதற்கிடையே சமூகவலைதளங்களில் #ASKSrk என்ற ஹேஷ்டேக்கின் மூலம் ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாடி வருகிறார் ஷாருக்.
அதன்படி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜவான் திரைப்படம் ரூ.ஆயிரம் கோடி வசூலை பெற்றதற்கு விஜய் ஷோசியல் மீடியா டீம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதை ரீ டிவிட் செய்து, நன்றி தெரிவித்த ஷாருக்கான், விஜய்யின் அடுத்த படத்தை பார்க்க காத்திருப்பதாகவும், லவ் யூ விஜய் சார் என பதில் கூறி இருந்தார்.
இதனையடுத்து, நடிகர் விஜய் இன்று (செப்டம்பர் 27) வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ ஜவான் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு ஷாருக்கான், அட்லி மற்றும் ஒட்டு மொத்த படக்குழுவுக்கும் வாழ்த்து” என கூறியுள்ளார். மேலும் ’லவ் யூ டூ ஷாருக்கான்’ என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Congratulations on the blockbuster @iamsrk, @Atlee_dir and the entire #Jawan team!
Love you too @iamsrk sir https://t.co/yq5T2BOhz8
— Vijay (@actorvijay) September 27, 2023
விஜயின் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தான நிலையில் அதற்கு திமுக அரசு தான் காரணம் என்று கூறி, விஜய் ரசிகர்கள் #WeStandWithLEO #DMKFearsThalapathyVIJAY என்ற ஹேஷ்டேக்குகளை எக்ஸ் வலைதளத்தில் டிரெண்ட் செய்து விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இவை எதையும் கண்டுக்கொள்ளாமல் விஜய் ஷாருக்கானுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
தாதாசாகேப் விருதில் மறைந்திருக்கும் சங்கதி: யார் இந்த வஹீதா ரஹ்மான்?
மீண்டும் மன்னிப்பு கேட்ட ஆர்.பி.வி.எஸ். மணியன் : காவல் நீட்டிப்பு!