தவெக நிர்வாகிகள் மரணம்… விஜய் இரங்கல்!

Published On:

| By Selvam

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் நேற்று (அக்டோபர் 28) நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, கார்,வேன், இருசக்கர வாகனங்களில் தொண்டர்கள் சென்றனர்.

மாநாட்டிற்கு சென்ற போது விபத்தில் உயிரிழந்த நிர்வாகிகள் மற்றும் மாரடைப்பால் உயிரிழந்த நிர்வாகிக்கு விஜய் இன்று (அக்டோபர் 28) இரங்கல் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தவெகவின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, விக்கிரவாண்டி வி.சாலை நோக்கி வரும் போது எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர்  கில்லி VL.சீனிவாசன், திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் விஜய்கலை, சென்னையை சேர்ந்த நிர்வாகிகள் . வசந்தகுமார், ரியாஸ், சார்லஸ், செஞ்சியை சேர்ந்த உதயகுமார் ஆகியோர் இன்று நம்மிடையே இல்லை என்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

ஈடு செய்யவே இயலாத, தாங்கொணா இத்துயரில் இருந்து வெளிவரவே இயலாமல் மனம் தவிக்கிறது. கட்சிக்காக இவர்கள் ஆற்றிய பணிகள் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். கட்சி நிர்வாகிகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ADVERTISEMENT

இவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன். மேலும், சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கட்சி நிர்வாகிகள் விரைவில் முழுவதும் குணமடைந்து, வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தாம்பரம்: 150 கிலோ கஞ்சா பறிமுதல்… இருவர் கைது!

டிஜிட்டல் திண்ணை: விஜய் எந்தெந்த ஏரியாவில் கில்லி… மாநாட்டு கூட்டம் சொல்லும் சீக்ரெட் டேட்டா!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share