பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று (மார்ச் 8) போராட்டத்தில் ஈடுபட்ட தவெகவினர், கைது செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். vijay condmens dmk govt on tvk partymen arrest
சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதை வலியுறுத்தியும், திமுக அரசை கண்டித்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று போராட்டம் நடைபெற்றது.

இதில் தவெகவினர் அதிகளவில் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி கண்டனம் தெரிவித்தனர். ஆனால் அனுமதியின்றி போராட்டம் நடத்துவதாக கூறி அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட தவெகவினர் கைது செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! vijay condmens dmk govt on tvk partymen arrest
இதுதொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாமலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியும் வரும் நிலையில், அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது.
பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, உலக மகளிர் தினமான இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கழக மகளிர் அணியினர் மற்றும் தோழர்கள் அறவழியில் அடையாளப் போராட்டத்தை நடத்தினர்.
தங்களுக்கான உரிமை கிடைக்காத பட்சத்தில் அதை வலியுறுத்திக் கேட்டுப் பெற வேண்டிய நிலையில் தமிழ்நாட்டுப் பெண்கள் இருப்பதால்தான் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இந்த அறவழி அடையாளப் போராட்டமானது நடைபெற்றது.
ஆனால் தமிழக மக்கள் தங்களின் தேவைகளுக்காகக் கூட போராட்டத்தை நடத்தக் கூடாது என்ற அராஜகப் போக்குடன் தமிழக அரசு, கழக மகளிர் மற்றும் தோழர்களைக் கைது செய்திருக்கிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத் தோழர்களையும் மகளிரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழ்நாட்டு அரசை வலியுறுத்துகிறேன்” என விஜய் தெரிவித்துள்ளார்.