பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பெயரை சொல்வதில் பயமில்லை என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (மார்ச் 28) தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமகிருஷ்ணா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்று வருகிறது. Vijay condemned MK Stalin Modi
இந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜய், “ஒவ்வொரு குடும்பமும் நன்றாக வாழ வேண்டும் என்று நினைப்பது தான் அரசியல். ஆனால், ஒரே ஒரு குடும்பம் மட்டும் வாழ வேண்டும் என்று நினைப்பது தான் அரசியலா? தமிழ்நாட்டை சுரண்டி வாழ நினைக்கிறார்கள். ஆனால், அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்பது தான் நமது அரசியல்.
மக்களாட்சியை மன்னராட்சி போன்று நடத்துகிற இவர்கள் நமக்கு எதிராக எவ்வளவு நெருக்கடி கொடுக்கிறார்கள்? ஆனால், அத்தனை தடைகளையும் தாண்டி மக்கள் சந்திப்பு நடந்துகொண்டு தான் இருக்கும்.
மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, நீங்கள் பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் பத்தாது. செயலிலும் ஆட்சியிலும் அதை காட்ட வேண்டும். நேற்று வந்தவனெல்லாம் முதல்வராக கனவு காண்கிறான் என சொல்கிறீர்கள். பின்னர் ஏன் எங்களுக்கு இவ்வளவு நெருக்கடி கொடுக்கிறீர்கள்? உங்கள் ஆட்சியை பற்றி கேள்வி கேட்டால் ஏன் இவ்வளவு கோபப்படுகிறீர்கள்?
இங்கு நீங்கள் தான் இப்படி என்றால் உங்கள் சீக்ரெட் ஓனர் மாண்புமிகு மோடி ஜி அவர்கள் அதுக்கும் மேல. உங்கள் பெயரை சொல்வதற்கு எனக்கு பயமா? மத்தியில் ஆளுகிறவர், மாநிலத்தில் ஆளுகிறவர் என்று சொல்கிறோம். இதை கூட புரிந்துகொள்ள மாட்டீர்களா” என்று தெரிவித்தார்.