தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் இன்று (ஏப்ரல் 19) வாக்களித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் ரஜினிகாந்த், அஜித்குமார், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரைபிரபலங்களும் காலையிலேயே தங்கள் வாக்கை செலுத்தினர்.
https://twitter.com/ANI/status/1781217896451969096
இந்தநிலையில், ரஷ்யாவில் G.O.A.T படப்பிடிப்பில் இருந்த விஜய், நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பாரா என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதனையடுத்து ரஷ்யாவில் இருந்து இன்று காலை விமானம் மூலம் விஜய் சென்னை வந்தடைந்தார்.
தொடர்ந்து மதியம் 12.15 மணிக்கு நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து வாக்களிப்பதற்காக காரில் கிளம்பினார். மதியம் 12.30 மணிக்கு நீலாங்கரை வாக்குச்சாவடி மையத்திற்கு வந்தார். அங்கு கூடியிருந்த அவரது ரசிகர்கள் மலர்தூவி அவரை வரவேற்றனர். ரசிகர்களின் கூட்டத்திற்கு மத்தியில் வாக்குச்சாவடிக்குள் நுழைந்த விஜய் தனது வாக்கினை செலுத்தினார்.
அப்போது அவரது கையில் காயத்திற்கு பிளாஸ்திரி ஒட்டப்பட்டிருந்தது. G.O.A.T பட ஷூட்டிங்கின் சண்டைக்காட்சிகளின் போது கையில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஊழியர்களை நீக்கியது கூகுள்… ஏன் தெரியுமா?
தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும்: திருமா வலியுறுத்தல்!