விஜய் விருது வழங்கும் நிகழ்ச்சி: மதிய சாப்பாடு என்ன தெரியுமா?

Published On:

| By Jegadeesh

தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.சென்டரில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்க உள்ளார்.

இன்று காலை முதலே பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.சென்டருக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மதிய உணவு தயாராகி வரும் நிலையில் அது தொடர்பான மெனு கார்ட் தற்போது வெளியாகியுள்ளாது.

அதன்படி, ஜம்ஜம் சுவீட், மாங்காய் ஊறுகாய், இஞ்சி புளி துவையல் புதினா, ஆனியன் வெள்ளேரி தயிர்பச்சடி, கதம்ப பருப்பு பொரியல், உருளை பட்டாணி வருவல், சவ்சவ் கூட்டு, காளிஃபிளவர் பகோடா, வெஜ்புலாவ், காரகுழம்பு (கத்திரிக்காய்), மாங்காய், முருங்கை கதம்ப சாம்பார், தக்காளி ரசம், ஆனியன் வடை, அப்பளம், அடை பிதமை பாயசம், மோர் உள்ளிட்ட உணவு வகைகள் கொண்ட மெனு தயாராகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

மு.வா.ஜெகதீஸ் குமார்

விஜய்க்கு அன்புமணியின் அன்பான வேண்டுகோள்!

ADVERTISEMENT

பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share