கோவை விமான நிலையத்திற்குள் வரும் தவெக தொண்டர்களின் வாகனங்கள் சித்ராவிலேயே போலீசாரால் தடுத்து நிறுத்தப்படுகிறது.
கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி நடிகர் விஜய் கலந்து கொண்ட தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில் 80 நாட்கள் கடந்து இன்று அவர் ஈரோடு விஜயமங்கலம் அருகே உள்ள சரளையில் நடைபெறும் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் தனி விமான மூலம் தற்போது கோவை விமான நிலையம் வந்துள்ளார். பின்னர் கோவையில் இருந்து கார் மூலம் மாநாடு நடைபெறும் விஜயமங்கலத்திற்கு செல்கிறார்.
கோவை விமான நிலையத்தில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் நடிகர் விஜய்யை வரவேற்று கோஷங்களை எழுப்பினர்
முனனதாக விமான நிலையத்தில் விஜயை பார்க்க வந்த தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் தடுப்புகள் அருகே நின்றிருந்தனர். பயணிகளை தவிர யாரும் நிற்கக்கூடாது என காவல் துறையினர் கலைந்து போகச்செய்தனர். தொடர்ச்சியாக விமான நிலையம் செல்லும் அவினாசி சாலையிலேயே தவெகவினர் தொண்டர்களை தடுத்து நிறுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
