தொடங்கியது தவெக மாநாடு!

Published On:

| By Kavi

தவெக மாநாடு கொடி பாடலுடன் தொடங்கிய நிலையில், சற்று நேரத்தில் விஜய் மேடைக்கு வரவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று (அக்டோபர் 27) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  நேற்று இரவு முதலே தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் விக்கிரவாண்டி வி.சாலைக்கு  வரத்தொடங்கினர்.

தற்போதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து கொண்டிருக்கின்றனர். சுமார் 5 கிமீட்டர் தொலைவில் இருந்து தொண்டர்கள் நடந்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் மாநாட்டு திடலில் காலையில் இருந்து காத்திருந்தனர். விஜய்யின் அப்பாவும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், அம்மா ஷோபா ஆகியோரும் மாநாட்டுக்கு வந்து முன்வரிசையில் அமர்ந்துள்ளனர்.

இந்தநிலையில் பிற்பகல் 3.10 மணியளவில் கொடி பாடலுடன் தவெக மாநாடு தொடங்கியது. 4  மணிக்கு மாநாடு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்  முன்கூட்டியே தொடங்கப்பட்டது.  முதலில் கொடி பாடல் ஒளிபரப்பப்பட்டது. தொடர்ந்து  பறை இசை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

தொண்டர்கள் கரகோஷம்  எழுப்பி ஆரவாரம் செய்து வருகின்றனர்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share