தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களுக்கு ஒளிப்பதிவாளர் ஆக பணியாற்றியவர் விஜய் மில்டன். கடந்த 2014 ஆம் ஆண்டு “கோலி சோடா” என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார்.
விஜய் மில்டன் இயக்கத்தில் 10 எண்றதுக்குள்ள, கடுகு, கோலி சோடா 2 ஆகிய படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் மில்டன் “மழை பிடிக்காத மனிதன்” என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன், முரளி ஷர்மா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆக்சன் திரில்லர் கதை களத்தில் உருவாகி உள்ள இந்த படத்தை Infiniti Film Ventures நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில் நேற்று (மே 29)”மழை பிடிக்காத மனிதன்” படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.
“சில உயிர்கள் அற்பமானவை எனும் எண்ணமே உலகின் அனைத்துத் தீமைக்குமான விதை…” என்ற வாக்கியத்துடன் இந்த படத்தின் டீசர் தொடங்குகிறது.
டீசர் முழுக்க நிறைய அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்து இருக்கிறது. ஒருபுறம் நடிகர் சரத்குமார் கையில் ஸ்னைப்பருடன் மிரட்டலாக போஸ் கொடுக்க, மற்றொருபுறம் நடிகர் சத்யராஜ் நீளமான முடியுடன் இன்டர்நேஷனல் டான் போல் ஸ்டைலாக நடந்து வந்து அசத்துகிறார்.
மே மாதம் ரோமியோவாக திரையரங்குகளை கலக்கிய நடிகர் விஜய் ஆண்டனி ஜூன் மாதம் மழை பிடிக்காத மனிதனாக திரையரங்குகளில் அதிரடி காட்ட இருக்கிறார்.
“மழை பிடிக்காத மனிதன்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000 அபராதம்!
சென்னையில் அதிகரித்து வரும் மின் தேவை: தவிர்ப்பது எப்படி?
வேலைவாய்ப்பு : சென்னை ஐஐடியில் பணி!
ஹெல்த் டிப்ஸ்: மகிழ்ச்சியாகத் தூங்கச் செல்லுங்கள், உங்களின் இறப்பு தள்ளி வைக்கப்படும்!