படை வீரன், வானம் கொட்டட்டும் போன்ற படங்களை இயக்கியவர் தனா. தற்போது தனா இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஹிட்லர். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரியா சுமன் நடிக்க, கௌதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஹிட்லர் படத்திற்கான இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த மோஷன் போஸ்டரில் ஓர் ரயிலை மையமாக வைத்து படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை அறிமுகம் செய்துள்ளனர் படக் குழு.
#HITLER https://t.co/12cPGHZq0O
— vijayantony (@vijayantony) September 28, 2023
ஹிட்லர் படத்தின் இந்த மோஷன் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விரைவில் படத்தின் அடுத்த அப்டேட் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என படக் குழு தெரிவித்துள்ளது.
மேலும் “தமிழ் படம்” இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள “ரத்தம்” திரைப்படம் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராக உள்ளது.
-கார்த்திக் ராஜா
