ஐந்து பேர் உயிரிழப்பு… தமிழக அரசுக்கு விஜய் வார்னிங்!

Published On:

| By Minnambalam Login1

vijay air force day

சென்னை மெரினாவில் இந்திய விமானப் படை சார்பில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (அக்டோபர் 7) இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், ” சென்னையில் இந்திய விமானப் படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், தங்கள் வேதனையை வெளிப்படுத்திய செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.

இப்படி மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.” என்று விஜய் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

ADVERTISEMENT

“சமாளிக்க முடியாத கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்”: கனிமொழி

5 பேர் உயிரிழப்பு – உயர்மட்ட விசாரணை வேண்டும் : திருமாவளவன்

எளச்ச யானையும் இல்லை… குண்டான குதிரையும் இல்லை… உருவக் கேலியால் வீழ்த்தி விட முடியாது- ரவீந்தர் 

Photo of author
Minnambalam Login1
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share