எம்.எஸ். சுப்புலட்சுமியாக மாறிய வித்யாபாலன்… காஞ்சிபுரம் சேலையில் அழகான போஸ்!

Published On:

| By Kumaresan M

பிரபல கர்நாடக இசை கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமியின் 108வது பிறந்த நாளான நேற்று (செப்டம்பர் 17)  நடிகை வித்யாபாலன் வெளியிட்ட புகைப்படங்கள்  அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பாரத் ரத்னா’ விருது பெற்ற பிரபல கர்நாடக பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் 108வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நடிகை வித்யாபாலன், அவரது தோற்றத்துக்கு தன்னை மாற்றிக் கொண்டுள்ளார்.

ADVERTISEMENT

MS Subbulakshmi's mystique is decoded in a comprehensive biography by TJS  George – Firstpost

இதற்காக பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனு பார்த்தசாரதியுடன் கைகோர்த்துள்ளார் வித்யாபாலன். இதற்கு, ரீ-கிரியேஷன் ஆஃப் ஐகானிக் ஸ்டைல்ஸ்’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது. எம்.எஸ். சுப்புலட்சுமி போன்றே சேலை அணிந்து, நெற்றியில் குங்குமம் விபூதி போன்றவையும் அணிந்து அவரை போலவே வித்யாபாலன் அந்த புகைப்படங்களில் காணப்படுகிறார்.

ADVERTISEMENT

MS Subbulakshmi Birth Anniversary: Vidya Balan Adorns Musician's Iconic  Look, Photos Go Viral | Republic World

இது குறித்து, வித்யாபாலன் தன் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் கூறியிருப்பதாவது, நான் எம்.எஸ்.சுப்புலட்சுமியை பார்த்து தான் வளர்ந்தேன். என் தாயார் தினமும் காலையில் அவர் பாடிய சுப்ரபாதம் பாடலை வீட்டில் ஒலிக்க செய்வார். அவர் மீதான என் அன்பின் வெளிப்பாடுதான் இது.

ADVERTISEMENT

இசைக்குயில் என்று ஜவஹர்லால் நேரு மற்றும் சரோஜினி நாயுடு ஆகியோரால் பாராட்டப்பட்டவர் எம்.எஸ். அம்மா. அவருக்கு இந்த வழியில் அஞ்சலி செலுத்துவதை நான் பெருமையாக உணர்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Vidya Balan Celebrates MS Subbulakshmi 108th Birth Anniversary With  Stunning Photographic Tribute to Iconic Indian Carnatic Singer and Bharat  Ratna Recipient (View Pics) | ???? LatestLY

எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் பேத்தி சிக்கில் மாலா சந்திரசேகரின் ஒப்புதலுடன் அவர் அணிந்த புடவைகள், அணிகலன்களை போன்று அணிந்து அவர் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். எம்.எஸ். சுப்புலட்சுமி அணிந்ததை போன்ற புடவைகளை  நல்லி சின்னசாமி செட்டி  தயாரித்து வழங்கியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

பெரியார் பிறந்தநாள் : ஸ்டாலின், எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்!

கெளதம் மேனன் டைரக்சனில் மேடையில் ரொமன்ஸ் செய்த விஜய் ஆண்டனி

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share