உத்தரபிரதேச மாநிலம் பிரயக்ராஜில், மகா கும்பமேளா கடந்த ஜனவரி 14-ஆம் தேதி தொடங்கியது. தினமும் கோடிக்கணக்கான பக்தர்கள் பிரயக்ராஜ், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். video man offering digital
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக ஆளுநர் ரவி உள்ளிட்ட பலரும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். பிப்ரவரி 26-ஆம் தேதியுடன் மகா கும்பமேளா நிறைவடைகிறது.
இந்தநிலையில், பிரயக்ராஜில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருப்பதால், பலரும் புனித நீராட முடியாத சூழல் உள்ளது. இந்தநிலையில், பிரயக்ராஜை சேர்ந்த தீபக் கோயல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.
திரிவேணி சங்கமத்தில் புனித நீராட முடியாத பக்தர்கள் தங்களது பாஸ்போட் சைஸ் போட்டோவை வாட்ஸப் மூலமாக அனுப்பினால், அந்த புகைப்படத்தை திரிவேணி சங்கமத்தில் மூழ்கவைத்து அதை 24 மணி நேரத்திற்குள் வீடியோவாக எடுத்து பக்தர்களுக்கு அனுப்பப்படும். இதற்கு கட்டணமாக ரூ.,1,100 வசூலிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை இந்த வீடியோவை 4 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். அப்பாவி பக்தர்களை தீபக் கோயல் ஏமாற்றுவதாக சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர். அதேவேளையில், சிலர் இவரது யோசனையை பாராட்டியுள்ளனர். video man offering digital