கேஸ் சிலிண்டர் பயன்படுத்துகிறீர்களா? கவனமாக இருங்கள்… அதிர்ச்சி வீடியோ!

Published On:

| By Kavi

Video of gas leaking from cooking gas cylinder

சமையல் எரிவாயு சிலிண்டரில் இருந்து கேஸ் வெளியாகி தீப்பற்றி எரியும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. Video of gas leaking from cooking gas cylinder

இந்தியாவில் சுமார் 34 கோடி பேர் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்துகின்றனர். இதுதவிர ஹோட்டல்கள் உள்ளிட்ட வணிக பயன்பாட்டுக்கு சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ADVERTISEMENT

இந்தநிலையில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்ட சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஜூன் 18ஆம் தேதி பதிவான அந்த சிசிடிவி காட்சியில் உள்ள வீடு யாருடையது என்ற விவரங்கள் தெரியவரவில்லை.

ADVERTISEMENT

அந்த வீடியோவில்,  கேஸ் சிலிண்டரை பயன்படுத்தும் போது அதனை ஒரு பெண் திறந்து விட்டிருக்கிறார். அதிலிருந்து கேஸ் வெளியேறியபோது அதை கீழே போட்டுவிட்டு வெளியே ஓடுகிறார். அந்த சிலிண்டரில் பொறுத்தப்பட்டிருந்த கேஸ் டியூப் வாயிலாக கேஸ் பிய்த்துக்கொண்டு வெளியேறுகிறது. அந்த அறை முழுவதும் எரிவாயு நிரம்ப மீண்டும் அந்த பெண்ணும், ஒரு ஆணும் வந்து வெளியேறும் எரிவாயுவை அடைக்க முயல்கிறார்கள்.

அந்தசமயத்தில் சமையலறையில் இருந்து தீப்பற்றி வெடித்து தீப்பிழம்பு அறை முழுவதும் பரவி எரிகிறது.

ADVERTISEMENT

அப்போது அந்த ஆணும் பெண்ணும் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். இதில் அந்த பெண் புடவையில் லேசாக தீப்பற்ற தனது உடையை கழற்றி எரிந்துவிட்டு ஓடுகிறார்.

நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வீட்டில் ஜன்னல், கதவு எல்லாம் திறந்திருந்திருந்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது. என்றாலும், வீட்டில் சமையல் சிலிண்டரை மிக கவனமாக கையாள வேண்டும் என்பதையே இந்த வீடியோ உணர்த்துகிறது. Video of gas leaking from cooking gas cylinder

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share