சென்னையில் தீக்கிரையான அரசு ஏ.சி பேருந்து: காரணம் என்ன… அரசு விளக்கம்!

Published On:

| By christopher

சென்னை பிராட்வேயிலிருந்து கேளம்பாக்கத்துக்கு நேற்று (ஜூலை 2) அரசு மாநகர ஏ.சி பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.

அடையாறு, எல்.பி சாலையில் அந்தப் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, பேருந்து திடீரென தீ பற்றி எரிந்தது. உடனே பதறிப்போன ஓட்டுநர், நடத்துநர் ஆகிய இருவரும் பயணிகளை உடனடியாக பேருந்திலிருந்து வெளியேற்றி பெரும் அசம்பாவிதத்தைத் தவிர்த்தனர். அதையடுத்து தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், துரிதமாகச் செயல்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

பேருந்து சாலையில் தீக்கிரையான வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தப் பேருந்து CNG-ல் இயங்கக்கூடிய பேருந்து எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

MTC CNG bus catches fire in Chennai

இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து போக்குவரத்துத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து பற்றி எரிந்து அந்தப் பகுதியே புகை மண்டலமாகக் காட்சியளித்தது.

ADVERTISEMENT

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டிருக்கிறது.

அதில், “TN 01 AN-1569 என்ற பதிவு எண் கொண்ட பேருந்தை, நேற்று (ஜூலை 2)  மதியம் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும் தடம் எண் 102, பிராட்வே-லிருந்து 10 பயணிகளுடன் சிறுசேரி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது மதியம் சுமார் 2 மணி அளவில் அடையார் பணிமனை அருகில் பேருந்து செல்லும் போது ஓட்டுநர், இன்ஜின் அருகே புகை வருவதைக் கவனித்ததால், உடனடியாக பேருந்தை நிறுத்தி, பயணிகளைப் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இறக்கிவிட்டார்.

பின் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் உதவியுடன் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டு அருகிலிருந்த அடையாறு பணிமனைக்குப் பேருந்து பாதுகாப்பாக எடுத்துச்செல்லப்பட்டது.

மாநகர் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் துரிதமாகச் செயல்பட்டு, பேருந்திலிருந்த பயணிகளுக்கும், அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் துரித நடவடிக்கை மேற்கொண்டார்கள்.

மேலும் இந்த பேருந்து இந்த ஆண்டின் ஜூன் மாதம்தான் டீசல் வகை எரிபொருளிலிருந்து CNG மாற்றம் பெற்றது” என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ் : விஜய் கல்வி விருது விழா முதல் மொபைல் ரீசார்ஜ் கட்டண உயர்வு வரை!

கிச்சன் கீர்த்தனா : பேரீச்சம்பழம் கேரட் சாலட்

டிஜிட்டல் திண்ணை: விக்கிரவாண்டி… அதிமுக – பாமக கூட்டணி! திமுக வைக்கும் திடீர் ட்விஸ்ட்!

உனக்கும் அது தெரிஞ்சு போச்சா? அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share