விடாமுயற்சி செகண்ட் லுக்… மோட்டிவேஷன் சொன்ன அஜித்

Published On:

| By Selvam

அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று (ஜூலை 7) வெளியாகியுள்ளது.

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அர்ஜூன், த்ரிஷா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ADVERTISEMENT

விடாமுயற்சியின் படத்தின் அப்டேட்டுக்காக தொடர்ந்து காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக கடந்த ஜூன் 30-ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

ADVERTISEMENT

அடர்ந்த பாலைவனப்பகுதியில் உள்ள சாலையில் நடிகர் அஜித், கூலிங் கிளாஸ் அணிந்தபடி கையில் பையுடன் ஸ்டைலாக நடந்து செல்லும் வகையில் அந்த போஸ்டரின் டிசைன் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தநிலையில், இன்று இரவு 8.02 மணிக்கு விடாமுயற்சி படத்தின் அப்டேட் வெளியாகும் என்று அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அவரது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

ADVERTISEMENT

இந்த அறிவிப்பு வெளியானவுடன் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகினார்கள். தற்போது வெளியாகியுள்ள செகண்ட் லுக் போஸ்டரில் பரபரப்பான ஆக்‌ஷன் காட்சியில் நடிகர் அஜித் கார் ஓட்டுவது போன்றும், கையில் துப்பாக்கியுடன் நின்றுகொண்டிருப்பது போன்றும் இரண்டு போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.

இதன்மூலம் விடாமுயற்சி படத்தில் அஜித் ரசிகர்களுக்கு ஆக்‌ஷன் காட்சியில் செம ட்ரீட் இருக்கும் என்றே தெரிகிறது. மேலும், அந்த போஸ்டரில் ‘முயற்சி ஒருபோதும் தோல்வியடையாது’ என்ற மோட்டிவேஷன் வாசகமும் இடம்பெற்றுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கடலூர் பாமக நிர்வாகி மீது தாக்குதல்…ராமதாஸ் கண்டனம்!

“ஜெய் பீம், வீரவணக்கம்”… போலீஸ் பாதுகாப்புடன் ஆம்ஸ்ட்ராங் உடல் ஊர்வலம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share