மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் வரும் மார்ச் 3-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. Vidaamuyarchi release Netflix ott
பொங்கலுக்கு வெளியாக வேண்டிய ‘விடாமுயற்சி’ ரிலீஸ் தள்ளிப்போனது. இதனையடுத்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி ‘விடாமுயற்சி’ திரையரங்குகளில் வெளியானது.

அஜித்குமார், த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா, ரம்யா சுப்பிரமணியன் உள்ளிட்டோர் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
‘பிரேக்கிங் டவுன்’ ஆங்கில படத்தின் தழுவலான ‘விடாமுயற்சி’ படத்தில் வழக்கமான அஜித்குமாருக்கான மாஸ் காட்சிகள் இல்லாமல், கதையின் போக்கில் அஜித் நடித்திருந்தார். இதனால் அஜித் ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்தனர். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

இந்தநிலையில், விடாமுயற்சி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மார்ச் 3-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
இந்தநிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அஜித் குமாரின் தீவிர ரசிகரான ஆதிக் இப்படத்தை இயக்கியுள்ளதால் ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Vidaamuyarchi release Netflix ott