தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தன்னுடைய 63-வது படத்தில் நடிக்கவிருக்கிறார்.
பிஸியான நடிகராக இருந்தாலும் கூட உடல்நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர் அஜித். இதனால் அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வதையும் அவர் வழக்கமாக வைத்திருக்கிறார்.
அதேபோல நேற்றும் (மார்ச் 6) மருத்துவ பரிசோதனைக்காக அப்போலோ மருத்துவமனைக்கு அஜித் சென்றிருக்கிறார். பரிசோதனைகள் முடிவில் அவரின் மூளையில் லேசான வீக்கம் இருந்தது தெரியவந்துள்ளது.
பயப்படும் அளவிற்கு இல்லை என்றாலும் ஒரு சிறிய அறுவைசிகிச்சை மேற்கொள்வது நல்லது என மருத்துவர்கள் பரிந்துரை செய்ய, இதற்கு அஜித்தும் ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது அப்போலோ மருத்துவமனையில் மருத்துவர் பெரியகருப்பன் தலைமையில் அஜித்திற்கு அறுவைசிகிச்சை நடைபெற்று வருகிறது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
IPL 2024: நடப்பு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறும் நட்சத்திர வீரர்?