’20 வருடங்கள் காத்திருந்தேன்’ இணைந்து நடிப்பதை உறுதி செய்த இளம் நடிகர்!

Published On:

| By Manjula

இதற்காக 20 வருடங்கள் காத்திருந்தேன் என, அஜித்துடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை இளம் நடிகர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் இணைந்து அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, பிரியா பவானி சங்கர், ஆரவ் என திரை நட்சத்திரங்கள் பலரும் நடித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

மங்காத்தா படத்துக்கு பின் அஜித்-அர்ஜுன் மீண்டும் இணைந்துள்ளதால் இருவருக்கும் இடையில் செம மாஸான காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் நடிகர் ஆரவ் அஜித் உடன் இணைந்து நிற்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, ” இந்த தருணத்திற்கு 20 வருடங்கள் ஆனது. விடாமுயற்சி என்றும் தோற்காது,” என ஒரு ரசிகனாக தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தயாரிப்பு நிறுவனம் படம் குறித்த தகவல்கள் எதையும் வெளியிடாமல் ரகசியம் காத்து வரும் நிலையில், ஆரவ் பகிர்ந்துள்ள இப்புகைப்படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

ADVERTISEMENT

படத்தில் அர்ஜுன், ஆரவ் இருவரும் அஜித்திற்கு வில்லனாக நடிக்கிறார்கள் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

Photo of author
Manjula
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share