ஷூட்டிங்கை கேன்சல் செய்து வெளியேறிய விசித்ரா… தினேஷ் தான் காரணமா?

Published On:

| By Manjula

கேம்ஷோ ஒன்றில் கலந்து கொண்ட விசித்ரா கடைசியில் ஷூட்டிங்கில் பங்கு பெறாமலேயே வெளியேறியுள்ளார்.

‘அண்டா கா கசம்’ என்னும் கேம் ஷோ விஜய் டிவியில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வருகிறது. அடுத்த வாரம் ஒளிபரப்பாக வேண்டிய நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் சென்னையில் நேற்று (ஜனவரி 28) நடந்துள்ளது.

இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் தினேஷ், விஷ்ணு, விசித்ரா, அக்ஷயா, அனன்யா, ரவீனா ஆகியோரை வைத்து ஷூட்டிங் நடத்திட திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக திட்டமிட்டபடி போட்டியாளர்கள் அனைவரும் காலையிலேயே செட்டுக்கு வந்துள்ளனர். ஆனால் ஷூட்டிங் தொடங்கும் முன் விசித்ரா ஒரு பிரச்சினையை கிளப்ப, ஷூட்டிங் சில மணி நேரங்கள் தடைபட்டுள்ளது.

அதன் பின்னரும், ”தினேஷ் எதிர் டீமில் இருக்கிறார் அவர் என் டீமிற்கு வர வேண்டும்”, என்று விசித்ரா மீண்டும் ஒரு பிரச்சினையை கிளப்பி இருக்கிறார்.

இதற்கு தினேஷ் சம்மதிக்காததால் ஷூட்டிங்கை மொத்தமாக புறக்கணித்து விசித்ரா வெளியேறியுள்ளார். கடைசியில் ரவீனாவின் உறவினரை வைத்து யூனிட் ஷூட்டிங்கை நடத்தியுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டில் தினேஷ்-விசித்ரா இருவருக்கும் ஒரு மோதல் நிகழ்ந்தபடியே இருந்தது. தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரும் அது தொடர்கதையாகி உள்ளது.

தற்போது இதை வைத்து தினேஷ்-விசித்ரா இருவரின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் சண்டை போட்டு வருகின்றனர்.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கம்யூனிஸ்டுகளின் கோட்டையில் புகுந்த கவர்னர்:  காங்கிரஸ் ஆபீசில் புகுந்த போலீஸ்- நாகையில் நடந்தது என்ன?

இனி சில்லறைக்காக சண்டை வேணாம்… டவுன் பஸ்களில் யுபிஐ டிக்கெட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share