ADVERTISEMENT

டிஜிட்டல் திண்ணை: செங்கோட்டையனை தடுத்த துணை ஜனாதிபதி- பரபர தகவல்!

Published On:

| By Minnambalam Desk

வைஃபை ஆன் செய்ததும், ”அதிகாரத்தைவிடவா அரசியல் ரொம்ப பெருசு?” என வழக்கத்துக்கு மாறா கேள்வி கேட்டபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

ADVERTISEMENT

என்னப்பா இன்னைக்கு புதிர் போடுறீரு?

ADVERTISEMENT

ஆமாய்யா.. அப்படித்தான் ’சிலபல சம்பவங்கள்’ நடந்துருக்கு.. சொல்றேன் கேளும்..

தவெகவுல செங்கோட்டையனுடன் சேர்ந்தது எத்தனை பேரு?ன்னுதான் திரும்புன பக்கமெல்லாம் கேட் போடுற மாதிரி கேள்வி கேட்கிறாங்க.. சோசியல் மீடியாவுலயும் பயர் டிபேட் நடக்குது..

ADVERTISEMENT

என்னய்யா… மாஜி எம்பி சத்யபாமா எல்லாம் போனாங்களே?

ஆமாய்யா.. சத்யபமாபா போனாங்கதான்.. அவங்களை மாதிரி அதிமுகவுல பொறுப்பு வகிச்சவங்க எத்தனை பேரு தவெகவுக்கு போனாங்கன்னு தெரியலையே..

ADVERTISEMENT

இதைப் பத்தி கோபி நகர அதிமுக நிர்வாகிகளிடம் பேசுனப்ப, ”ஒருத்தர்
கட்சி மாறும் போது, அவருகூட போனவங்கன்னு ஒரு லிஸ்ட்டே வெளியிடுவாங்க.. அதுல முன்னாடி இருந்த கட்சியில என்ன பொறுப்பு வகிச்சாங்கன்னும் இருக்கும்.. செங்கோட்டையன் மேட்டருல தவெக அப்படி ஒரு லிஸ்ட்டை இதுவரை தரலையே… ஏன்னா எங்க தொகுதியில இருந்து அதிமுகவை விட்டு நீக்கினவங்க பெரிய அளவில் செங்கோட்டையனுடன் தவெகவுக்கு போகலை.. அதான் உண்மை” என்கின்றனர்.

அத்தோடு நிற்காம இன்னொரு மேட்டரையும் சொல்றாங்க.. “கொஞ்ச நாளைக்கு முன்னாடி கோவைக்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வந்திருந்தாரு.. அப்ப செங்கோட்டையன் மகன் எழில், மனைவியோட சிபிஆரை சந்திச்சு பேசுனாரு..

இந்த சந்திப்புல, “நம்ம சமூகத்துக்காரருதான் எடப்பாடி.. அவரு முதல்வராக இருந்தாரு.. இப்ப முதல்வர் வேட்பாளரும் அவருதான்.. அவரை எதுக்கு அப்பா கஷ்டப்படுத்தனும்? அப்பா கிட்ட போய் நான் இதை சொன்னேன்னு சொல்லுங்க..” என சொல்லி அனுப்பியிருந்தார்..

அதனால விஜய்யை சந்திச்சப்ப செங்கோட்டையன் மகன் எழில் கூட போகலையே..”ன்னும் சொல்றாங்க..

அதிமுகவுல இருந்து நீக்கப்பட்ட கோபி நிர்வாகிகள் நம்ம கிட்ட பேசும்போது, ”அதிமுகவுக்கும் திமுகவுக்கும்தானே போட்டி.. இத்தனை எலக்‌ஷனை பார்த்த அண்ணனுக்கு (செங்கோட்டையன்) இதுகூட தெரியாம இருக்காது.. அவருக்கு திமுகவை பிடிக்கலை.. தவெகவுக்கு போயிட்டாரு..

எங்களைப் பொறுத்தவரைக்கும் விருப்பப்பட்டவங்க திமுகவுக்கு போவாங்க.. இல்லையே மன்னிப்பு லெட்டரை கொடுத்துட்டு அதிமுகவுக்கே மறுபடியும் போயிடலாம்னு இருக்கோம்.. விஜய் கட்சியில அண்ணன் சேர்ந்ததை அவருக்காக அதிமுகவில் கூட நின்ன எங்களால ஏத்துக்கு முடியாதுங்க அண்ணா” என்கின்றனர்.

இப்படி ஒரு மேட்டர் ஓடுதுன்னா இன்னொரு பக்கம் செங்கோட்டையனை சேர்த்ததுல கோபி தவெகவினருக்கே அதிருப்திதானாம்.. இதை புஸ்ஸி ஆனந்துக்கு போனடிச்சே சொல்லி இருக்காங்க..

“செங்கோட்டையன்னா எல்லோருக்கும் தெரியும்.. அதுதான் அவரோட பலம்.. அதைத்தாண்டி ஆதரவாளர்கள் பலமெல்லாம் எதுவுமே அவருக்கு இல்லைங்கிறதுதான் கிரவுண்ட் ரியாலிட்டி.. அவரு கூட எத்தனை பேரு வந்தாங்கன்னு பார்த்த உங்களுக்கே தெரியும் அண்ணா.. அதுவும் தலைவருக்கு அடுத்ததாக போஸ்டிங் கொடுத்து, 4 மாவட்டத்துக்கு அமைப்பு செயலாளராவும் செங்கோட்டையனை போட்டுவிட்டுட்டீங்களே.. அவரு அவ்வளவு ஒர்த் இல்லையேங்க அண்ணா.. அவருகூட எப்படி ஒர்க் பண்றதுன்னு கேட்டோம்..

எங்ககிட்ட புஸ்ஸி ஆனந்த் அண்ணனும் பேசுனாரு.. செங்கோட்டையன் நம்ம கூட இருக்கிறது பலம்தானேன்னு கிளாஸ் எடுத்தாரு.. அப்ப, செங்கோட்டையன் கூட நிறைய நிர்வாகிகள் வரலைங்கிறதும் எங்களுக்கு தெரியும்னும் புஸ்ஸி ஆனந்த் சொன்னாரு”ன்னு ஓபன்னாக சொல்றாங்க..

”புஸ்ஸி ஆனந்தும் நாங்க சொல்றதை அப்படியே தளபதிகிட்ட சொல்லியிருக்கார்… அதுக்கு அப்புறம்தான் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ”செங்கோட்டையனுக்கு அனைத்து நிர்வாகிகளும் ஒத்துழைப்பு தரனும்னு அழுத்தமாக தளபதி சொல்லி இருந்தாரு”.. ன்னு தவெக நிர்வாகிகள் சொன்ன தகவலை டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share