‘தமிழ் தேசத்தின் தனி பெரும் தலைவர்’ சி.பி.ராதாகிருஷ்ணன் – வாழ்த்து செய்தியில் செங்கோட்டையன்

Published On:

| By Mathi

KAS CPR1

நாட்டின் துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை, ‘தமிழ் தேசத்தின் தனிப்பெரும் தலைவர்’ என புகழ்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார் அதிமுகவின் அதிருப்தி தலைவரான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ.

செங்கோட்டையன் இன்று வெளியிட்ட அறிக்கையில், இன்றைய உலகத் தலைவர்களில் முதன்மையானவராக திகழும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் இன்றைய இரும்பு மனிதர் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரால் முன்மொழியப்பட்டவரும், எம்ஜிஆர்- ஜெயலலிதாவின் அன்பைப் பெற்றவருமான நம் தமிழ்த் தேசத்தின் தனி பெரும் தலைவரான சி.பி.ராதகிருஷ்ணன், பாரத திருநாட்டின் துணை குடியரசு தலைவராக தேர்வு பெற்றுள்ளது இந்த நாட்டின் பொன்னேட்டில் எழுதப்படும் திருநாள். தன் பணிக் காலத்தில் இந்திய தேசத்தை உயரத்துக்கு எடுத்துச் செல்ல மனம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவிக்கிறேன் என கூறியுள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share