FIRST ON NET : இளையராஜா பெற்றுத்தந்த ராயல்ட்டி தொகை!

Published On:

| By Balaji

இளையராஜாவின் காப்பிரைட் விவகாரங்கள் சூடுபிடித்து பல மட்டங்களில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடும் இரு அணிகளான விஷாலின் ‘நம்ம அணி’யும், தாணு, ரித்தீஷ், சேரன் ஆதரவில் களமிறங்கும் ‘முன்னேற்ற அணி’யும்கூட இளையராஜாவின் இசை நிகழ்ச்சியைப் பற்றிய பேச்சுகளை தவறவிடவில்லை. தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் சம்பந்தமான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் தாணுவிடம் இளையராஜாவின் காப்பிரைட் பிரச்னை குறித்த கேள்வி எழுப்பப்பட்டபோது, இளையராஜா தயாரிப்பாளர்களுக்கு இதுவரை பெற்றுத்தந்த பணத்தைப் பற்றி தாணு கூறியது முக்கியமான தகவல்.

**HMV மூலமாக எம்.எஸ்.வி., கே.வி.மகாதேவன், இளையராஜா ஆகியோர் லட்சக்கணக்கான பாடல்களைப் பதிவுசெய்து பணத்தை வாங்கிக் கொடுத்திருக்கின்றனர். நாங்கள் HMV மீது வழக்குத் தொடுத்து கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்க்கு இளையராஜா ஸ்டாம்ப் ட்யூட்டி கட்டி தயாரிப்பாளர்களுக்கு சேரவேண்டிய தொகை 50% என்று அறிவித்திருக்கிறார். அந்த வழக்கில் நாம் கண்டிப்பாக வெற்றிபெறுவோம். இளையராஜா கண்டிப்பாக வெற்றிபெறுவார். அப்போது அவர் சொன்னதுபோலவே 50 கோடி ரூபாயை தயாரிப்பாளர்களுக்கு வழங்குவார். அது, யாருக்கு சென்று சேரவேண்டுமோ அவர்களுக்கு சரியாக பிரித்துக் கொடுக்கப்படும். ஆறு மாதங்களுக்குமுன்புகூட இளையராஜா மூலமாக 28 லட்ச ரூபாய் வசூல் செய்து கொடுக்கப்பட்டது. அதை உரியவர்களுக்கு பிரித்துக் கொடுத்திருக்கிறோம்** என்று கூறினார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share