’வேட்டையன்’ : ரூ.200 கோடி கிளப்பில் இணைந்தது!

Published On:

| By christopher

ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான ‘வேட்டையன்’ திரைப்படம் வெளியான 5 நாட்களில் 240 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, துசாரா விஜயன், அபிராமி ஆகியோர் நடித்து கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘வேட்டையன்’.

இந்தத் திரைப்படத்திற்கு மிகக் குறைவான ஒப்பனிங் இருந்து வந்த நிலையில், ரிலீஸாகி 5ஆவது நாளில் இந்தத் திரைப்படம் 240 கோடி ரூபாய் வசூல் சாதனையைப் படைத்துள்ளது என படத்தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது.

இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் ரூ.31.7 கோடி ரூபாயை எட்டியது. அதைத் தொடர்ந்த அடுத்தடுத்த நாட்களில் ரூ.25 கோடி, ரூ. 24 கோடி, ரூ.26.75 கோடி என வசூல் புரிந்தது. இந்த நிலையில், படம் வெளியாகி முதல் 5 நாட்களில் ரூ.240 கோடி ரூபாய் வசூல் புரிந்துள்ளது.

ஆனால், இந்தப் படத்தின் ஓவர்சீஸ் வசூல் முந்தைய ரஜினி படங்களை விட மிகக் குறைவான வசூலையே படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம், இந்தப் படத்திற்காக செய்யப்பட்ட குறைவான விளம்பரங்கள், ரஜினிகாந்தின் உடல்நிலை , விநியோகஸ்தர்களின் தவறான ரிலீஸ் அணுகுமுறை என திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்தப் படத்தின் உலகளாவிய வசூல் ஏறத்தாழ ரூ.175 கோடி – ரூ.212 கோடியிருக்கும் எனவும் தெரிகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை தமிழில் சராசரியாக 57.25 சதவீத இருக்கைகள் ‘வேட்டையன்’ படம் திரையிடப்படும் திரையரங்குகளில் மக்கள் வருகை பதிவாகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ஒட்டுமொத்தமாக இந்தப் படத்தின் தெலுங்கு டப்பிங் மிக அதிக வசூலை பதிவு செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– ஷா

குறைந்தது தங்கம் விலை… இன்று சவரன் எவ்ளோ?

கனமழையால் பாதிப்பு : உதவிக்கரம் நீட்டிய தேமுதிக… பிரேமலதா முக்கிய அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share