இயக்குநர் த.ச. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ வேட்டையன் ‘ திரைப்படத்தில் நடிக்கும் மஞ்சு வாரியர் அதன் டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளார்.
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று இயக்குநர் த.ச.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ வேட்டையன் ‘. இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா, அபிராமி, துசாரா விஜயன், எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இதில், ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் மலையாள நடிகை மஞ்சு வாரியர் , இந்தப் படத்திற்கான தனது டப்பிங் பணிகளை தற்போது தொடங்கியுள்ளார்.
சமீபத்தில் இந்தப் படத்தில் நடிக்கும் பஹத் பாசில், துசாரா விஜயன், அபிராமி, ரித்திகா சிங் ஆகிய நடிகர்கள் இந்தப் படத்திற்கான டப்பிங் வேலைகளை முடித்து தங்களது சமூக வலை தளங்களில் அதுகுறித்து பதிவிட்டிருந்தனர். ‘ ஜெய் பீம் ‘ படத்தை இயக்கிய த.ச.ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தில் 33 ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்த் – அமிதாப் பச்சன் இணைந்து நடிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் அமிதாப் பச்சன் நடிக்கும் முதல் தமிழ் படமாகும். ‘ வேட்டையன் ‘ திரைப்படம் வரும் அக்.10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– ஷா
பொன் மாணிக்கவேல் மீதான வழக்கு ஜாமின் வழங்க கூடியதா? : சிபிஐக்கு நீதிமன்றம் கேள்வி!
’யாரு சாமி நீ’: தேசிய விளையாட்டு தினத்தில் மாஸ் வீடியோ பகிர்ந்த ராகுல் காந்தி