எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியான நிலையில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தற்போது இனிப்புகள் வழங்கி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர்நீதி மன்றம் இன்று (ஆகஸ்ட் 25) தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி, அதிமுக பொதுக்குழு செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளனர். அதாவது, எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தடைவிதிக்க, நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அத்துடன் ஓபிஎஸ் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுக்களுக்கு எந்த முகாந்திரமும் இல்லை, மனுக்கள் செல்லத்தக்கதல்ல என்று கூறி, நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதராவாக வெளியான இந்த தீர்ப்பை அடுத்து சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: துவக்கி வைத்த ஸ்டாலின்
திமுக அமைச்சர்கள் மீதான சூமோட்டோ வழக்குகள்: நீதிபதியை விமர்சித்த முரசொலி
