ஆளுநருக்கு எதிரான தீர்ப்பு: இரவு முழுதும் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு போன் அழைப்புகள்!

Published On:

| By Aara

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடமிருந்து பறிக்கப்பட்டு முதலமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்ட சட்ட மசோதாக்கள் ஆளுநர் ஆர்.என்.ரவியால் நிலுவையில் வைக்கப்பட்டிருந்தன. Verdict against Governor: Phone calls to E.V. Velu

இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 8) தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு மாநில அரசு தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை அளித்தது.

அதன்படி ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் சட்டவிரோதமானது என்றும் நிலுவையில் வைக்கப்பட்ட அந்த 10 மசோதாக்களும் உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தின்படி ஒப்புதல் அளிக்கப்பட்டு சட்ட அங்கீகாரம் பெற்றுவிட்டன என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தத் தீர்ப்பை மாநில உரிமைகள் என்ற அடிப்படையில் பல்வேறு அரசியல் தலைவர்களும் வரவேற்றனர். அதே நேரம் மசோதாக்கள் ஆக இருந்து உச்ச நீதிமன்றத்தால் சட்டமாக மாற்றப்பட்ட அந்த 10 சட்டங்களும் பெரும்பாலும் உயர்கல்வித்துறையை சேர்ந்தவை. அதாவது பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் இனி மாநில முதலமைச்சருக்கு தான் என்பதை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் இந்த தீர்ப்பு பற்றி கல்வியாளர்கள் என்ன நினைக்கிறார்கள்?

சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது சங்கராபுரம் உறுப்பினர் உதயசூரியன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன்பு… நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி கல்வியாளர்கள் பலர் தனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறிய விஷயங்களை சட்டமன்றத்தில் பகிர்ந்து கொண்டார்.

அப்போது பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “ஏறத்தாழ 20 ஆண்டுகாலமாக எனக்கு கல்வித்துறையில் நேரடி அனுபவம் உண்டு.

ஆளுநருக்கு எதிரான தீர்ப்பு இரவு முழுதும் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு போன் அழைப்புகள்! #EVVelu #RNRavi

இந்த வகையில் தமிழ்நாட்டிலே இருக்கிற தனியார் கல்லூரிகளின் தாளாளர்கள், மூத்த கல்வியாளர்கள், ஓய்வு பெற்ற துணைவேந்தர்கள், சுயநிதி கல்லூரிகளின் கூட்டமைப்பிலே இருக்கிற மாநில நிர்வாகிகள், இப்போது கல்லூரிகளில் பணியாற்றிக் கொண்டிருக்கிற பேராசிரியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நேற்று இரவு முழுதும் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் வாதாடி பெற்றிருக்கிறார், அதற்காக அவருக்கு எங்களது நன்றியை தெரிவியுங்கள் என குறிப்பிட்டார்கள். Verdict against Governor: Phone calls to E.V. Velu

குறிப்பாக நேற்று இரவு 9 மணிக்கு அரசியல் அறிவியல் துறையைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் எனக்கு போன் செய்து, ‘அன்றைய முதலமைச்சராக இருந்த அண்ணன் கலைஞர் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கிற முதலமைச்சர்கள் தான் சுதந்திர தினத்திற்கு கோட்டையில் கொடியேற்ற வேண்டும் என்று ஒன்றிய அரசாங்கத்திற்கு கடிதம் எழுதி, நேரடியாக பேசியதன் விளைவாக இன்றைக்கு இந்தியாவில் இருக்கிற அத்தனை மாநில முதலமைச்சர்களும் கொடி ஏற்றுகிற வாய்ப்பைப் பெற்றுத் தந்தார்.

ஆனால், இன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலின், ஒன்றிய அரசு கொடுக்க தவறியதை, கொடுக்க மறுத்ததை, கல்வி உரிமையை உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிப் பெற்றிருக்கிறார்.

மாநில உரிமைகளுக்கு வித்திட்ட வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வாங்கி தந்திருக்கிறார். எனவே எங்கள் அத்தனை பேரின் சார்பில் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் கல்லூரி மாணவர்கள், தமிழ் மக்களின் சார்பாக நன்றிகளை முதல்வருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறினார். எனவே அவர்கள் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சருக்கு மாநில உரிமைகளை வித்திட்டவருக்கு நானும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார் அமைச்சர் எ.வ.வேலு. Verdict against Governor: Phone calls to E.V. Velu

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share