விஜய்யின் தி கோட் படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.
அர்ச்சனா கல்பாத்தியின் தயாரிப்பில் விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் – கோட் படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்து வந்தது.
நாடாளுமன்ற தேர்தலுக்காக ரஷ்யாவில் இருந்து சென்னை வந்து வாக்கு செலுத்திய விஜய், அடுத்த கட்டமாக அமெரிக்காவில் நடக்கும் படப்பிடிப்புக்காக மே 11ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார்.
இந்த நிலையில் வெங்கட் பிரபு இன்று தனது எக்ஸ் பக்கத்தில், ‘ விஜய்ணாவோடு இணைந்து வெற்றிகரமாக விஷுவல் எஃபெக்ட்ஸ் வேலைகளை முடித்துவிட்டோம்” என்று தெரிவித்து, அதோடு விஷுவல் எஃபெக்ட் பணிகளின் ஒரு ஸ்னாப்பையும் வெளியிட்டிருக்கிறார்.
தி கோட்ஸ் படத்தின் விஷுவல் எஃபெக்ட்டுகள், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்திருக்கும் லோலா விஷுவல் எஃபெக்ட்ஸ் நிறுவனத்தில் நடந்திருக்கின்றன.
இந்த படத்தில் விஜய்யும் வெங்கட் பிரபுவும் இணைந்து விஷுவல் எஃபெக்ட்ஸ் விருந்து படைத்திருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் கனமழை? வானிலை மையம் ரிப்போர்ட்!
2025 ஐபிஎல் முதல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை: காரணம் என்ன?