நடிகர் விஜய்யின் தளபதி 68 படம் அறிவியல் புனைவு கதைக்களத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு “THE GREATEST OF ALL TIME” (G.O.A.T) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
G.O.A.T படம் ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 25வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிகர் பிரசாந்த், நடிகர் பிரபு தேவா, நடிகர் மோகன், நடிகை மீனாட்சி சவுத்ரி, நடிகை சினேகா, நடிகை லைலா, நடிகர் அஜ்மல் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும், வெங்கட் பிரபுவின் பாய்ஸ் கேங்கும் இந்த படத்தில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான “விசில் போடு” வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
விஜய், பிரபு தேவா, பிரசாந்த் ஆகிய மூவரும் இணைந்து பாடலுக்கு நடனம் ஆடும் காட்சி சமூக வலைத்தளங்களில் செம வைரல் ஆனது.
மேலும், ரஷ்யாவில் படப்பிடிப்பு தளத்தில் விஜய் செம்ம ஜாலியாக ஃப்ரீ ஸ்டைல் ஸ்கூட்டரை ஓட்டி செல்லும் வீடியோ வெளியானது.
இந்நிலையில், அடுத்து G.O.A.T படத்தின் செகண்ட் சிங்கிள் குறித்த ஒரு தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அது என்னவென்றால் வரும் ஜூன் 22 ஆம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு G.O.A.T படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
G.O.A.T படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
சண்டே ஸ்பெஷல்: மாம்பழம் வாங்கப் போறீங்களா… இதை கவனிங்க!
பட்டப் பகலில் கோயம்பேடு பாலத்தில்… இப்படியுமா? வைரலாகும் வீடியோ!
ஆர்சிபி அணியின் தோல்விக்கு காரணம் இதுதான்: ஹர்பஜன் ஓபன் டாக்!
