விஜய் குறித்து விமர்சனம்… மன்னிப்பு கேட்க வேண்டுமா? – வேல்முருகன் காட்டம்!

Published On:

| By Selvam

velmurugan says i am not ask apology

“விஜய் பற்றி பேசிய என்னுடைய உரையை முழுமையாக கேட்காமல், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிக்கை விடுவதை தவெகவினர் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று தவாக தலைவர் வேல்முருகன் இன்று (ஜூன் 5) தெரிவித்துள்ளார். velmurugan says i am not ask apology

கடந்த சில நாட்களுக்கு முன்பாக சேலத்தில் பேசிய வேல்முருகன், “சினிமா நடிகர்களை மாணவிகள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க அனுமதிப்பதா தமிழர் கலாச்சாரம்? போயஸ் கார்டனில் நடிகனின் தரிசனத்துக்கு காத்திருப்பதால் வீட்டில் உலை வெந்துவிடுமா?” என்று நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் ஆகியோரை கடுமையாக விமர்சித்திருந்தார். வேல்முருகனின் இந்த பேச்சுக்கு தவெக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் தாஹிரா கண்டனம் தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக, கடலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து வேல்முருகன் பேசியபோது,

“விஜய் கட்சியை தொடங்கியபோது ஒரு தமிழனாக அந்த கட்சியை நான் வரவேற்றேன். ஆனால், எடுத்தவுடன் நான் சட்டமன்றத்திற்கு செல்வேன் என்ற அறிவிப்பில் எனக்கு உடன்பாடில்லை. 10 ஆண்டுகள் மக்களுக்கு சேவை செய்துவிட்டு தேர்தலில் நிற்கலாம் என்று அரசியல் ரீதியான விமர்சனங்களை முன்வைத்தேன்.

ADVERTISEMENT

சேலம் கூட்டத்தில் பல இளம் பெண்கள் சினிமா கதாநாயகர்களையே தங்களுக்கான அவதார புருஷர்களாக நினைத்துக்கொண்டு, அவர்களை கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது பெற்ற தாய் தந்தையரின் முன்னிலையில் அதுபோன்று அநாகரிக செயல்களில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல என்று சொன்னேன்.

மேலும், பல நடிகர்களின் பெயர்களை வரிசைப்படுத்தி, அவர்களுடைய நடிப்பை பாராட்டுங்கள், ஆனால், பெற்றோர்களாகிய நீங்கள் பெண்களை சினிமாக்காரர்களிடம் அதிக அட்வான்ட்டேஜ் எடுத்துக்கொள்ள அனுமதிக்கக் கூடாது. அது தமிழகர்களின் பண்பாடு, நாகரிகம் அல்ல என்று கூறினேன்.

ADVERTISEMENT

அதேபோல, காமராஜரோடு விஜய்யை ஒப்பிட்டு பேசுவது ஏற்புடையது அல்ல என்று பேசினேன். ஒரு மணி நேரம் 40 நிமிடம் பேசிய என்னுடைய உரையை முழுமையாக கேட்காமல், சில அரைகுறை வேக்காடுகள் எங்கள் தளபதி பற்றி பேசிவிட்டாய் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிக்கை விடுவது எல்லாம் வேண்டாம். இதையெல்லாம் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

விஜய் இளம்பெண்களை கட்டிப்பிடித்து முத்தமிட்டார் என்று நான் பேசவில்லை. நான் சொல்லாத ஒன்றை சொல்லியதாக நீங்கள் எப்படி எடுத்துக்கொள்ளலாம். எங்கள் கட்சியினரை நேற்றைக்கு பெய்த மழையில் இன்றைக்கு முளைத்த காளான்கள் பேச விஜய் அனுமதிக்க கூடாது. என் மீது ஆட்சேபனை இருந்தால், விஜய் பத்திரிகையாளர்களை சந்தித்து கேள்வி கேட்கட்டும்” என்று தெரிவித்தார். velmurugan says i am not ask apology

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share