‘முட்புதர்கள், குப்பைகளால் சூழப்பட்ட வேலூர் கோட்டை: விடிவு எப்போது?

Published On:

| By Kavi

Vellore Fort surrounded by debris

வேலூர் கோட்டையை சுற்றியுள்ள கரைப்பகுதிகள் குப்பைகளாலும், முட்புதர்களாலும், செடி, கொடிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர் மாநகரின் மையத்தில் அமைந்துள்ள தரைக்கோட்டையான வேலூர் கோட்டையை சுற்றி சுமார் 3 கி.மீ தூரத்துக்கு அகழி அமைந்துள்ளது. கோட்டை நுழைவு வாயிலின் தெற்கில் மைதானத்தின் ஒரு பகுதி புல்வெளி பூங்காவாக தொடர்ந்து பராமரிப்பில் இருந்து வருகிறது. வடக்கில் அமைந்துள்ள பூங்கா அவ்வப்போது பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோட்டைக்குள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலான அம்சங்களுடன் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோட்டையை இரவிலும் காணும் வகையில் அகழியை ஒட்டிய கரைப்பகுதியில் விளக்குகள் அமைக்கப்பட்டன. ஆனால், அண்ணா சாலையை ஒட்டிய கோட்டை பகுதி மட்டுமே இரவு நேரத்தில் ஒளிர்கிறது. கோட்டையின் வடக்கு, மேற்கு, தென்மேற்கு பகுதிகள் பராமரிப்பின்றி விடப்பட்டுள்ளன. இதனால் கோட்டையை சுற்றி அகழியை ஒட்டியுள்ள காலியிடங்கள் அப்படியே விடப்பட்டுள்ளன.

இங்கு செடிகொடிகளும், புதர்களும் மண்டி காடுபோல் காட்சி அளிக்கிறது. குறிப்பாக அகழியை ஒட்டியுள்ள கரைப்பகுதி முழுவதுமே குப்பைகளாலும், மண்டிய புதர்களாலும் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. இதை சுத்தம் செய்து  மாலை நேர பொழுதுபோக்கும் இடமாக மாற்ற வேண்டும் என்றும் ஏற்கனவே கோட்டையை சுற்றியுள்ள காலியிடங்களும் பூங்காவாக மாற்றப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்படும் என்ற திட்டம் என்னவானது என்றும் இதற்கான விடிவு எப்போது கிடைக்கும் என்றும் பொதுமக்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வலுத்து வருகிறது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: காய்கறி சப்பாத்தி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share