டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

Published On:

| By admin

வேலூரில் சாலை போடும்போது தெருவில் நின்ற டூவிலருடன் சேர்த்து சிமென்ட் ரோட்டை போட்டுள்ளது, வேலூர் மக்களை ஆச்சரியத்திலும் அதிகாரிகளின் மெத்தன போக்கையும் காட்டியுள்ளது.

வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் வேலூர் மெயின் பஜார் காளிகாம்பாள் கோயில் தெருவில் போடப்பட்டுள்ள சிமென்ட் சாலை வேலூர் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. காளிகாம்பாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிவா. இவர் தனது டூவிலரை நேற்று முன்தினம் (ஜூன் 27) இரவு வழக்கம் போல் தங்களது கடை முன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

ADVERTISEMENT

நேற்று (ஜூன் 28) காலை எழுந்துவந்து பார்த்தபோது தெருவில் புதியதாக சிமென்ட் சாலை போடப்பட்டிருந்தது. அதோடு சேர்ந்து தெருவோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தன் இருசக்கர வாகனத்தையும் சேர்த்தும் சாலை போடப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து வாகனத்தை எடுக்க முயன்றார். ஆனால், சிமென்ட் கலவை இருகிவிட்டதால் டூவீலரை எடுக்க முடியவில்லை.
இப்படி மோட்டார் சைக்கிளை அப்புறப்படுத்தாமல் சாலை அமைக்கப்பட்டதை சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இது சிறிது நேரத்திலேயே வைரலானது.

தகவலறிந்த வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து அதைப் பார்வையிட்டு சாலையை ஆய்வு செய்தார். அதையடுத்து சாலை பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரரை செல்போனில் தொடர்புகொண்டு கண்டித்தார். மேலும் அங்கு மீண்டும் தரமாக சாலை அமைக்கும்படி அறிவுறுத்தினார்.

ADVERTISEMENT

அதையடுத்து சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அந்த இடத்தில் சிமென்ட் கலவை கொட்டப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதி வணிகர்கள், பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

**-ராஜ்**

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share