சென்னை, அடையாறு மண்டலம், 172-வது வார்டு, வேளச்சேரி குருநானக் கல்லூரி அருகில் அமைந்துள்ள வேளச்சேரி இந்து மயான எரிவாயு தகனமேடையில் பழுது சரிபார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியிருந்ததால் 12.9.2024 முதல் ஒரு மாத காலத்துக்கு மேற்கண்ட மயான பூமியில் எரிவாயு தகனமேடை இயங்காது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, மேற்கண்ட மயானபூமியில் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், வருகின்ற நவம்பர் 12-ம் தேதி வரை இயங்காது. எனவே, பொதுமக்கள் அருகிலுள்ள ஆலந்தூர் மண்டலத்துக்குட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் எரிவாயு மயானபூமி, பெருங்குடி மண்டலத்துக்குட்பட்ட புழுதிவாக்கம் எரிவாயு மயானபூமி மற்றும் 178-வது வார்டுக்குட்பட்ட வேளச்சேரி தரமணி சாலையில் அமைந்துள்ள பாரதி நகர் எரிவாயு மயானபூமிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: ஆரோக்கியம் காக்க… எதைச் சாப்பிடுவது… எதைத் தவிர்ப்பது?
டாப் 10 நியூஸ்: நெல்லையில் எடப்பாடி முதல் மகளிர் டி20 உலகக் கோப்பை பைனல் வரை!
கிச்சன் கீர்த்தனா… சண்டே ஸ்பெஷல்: பாக்கெட் பொருட்கள் வாங்குபவரா நீங்கள்.. ஒரு நிமிஷம்!
டிஜிட்டல் திண்ணை: மூட்டை கட்டும் ஆர்.என்.ரவி… புதிய ஆளுநர் வி.கே.சிங்? ஸ்டாலின் வைத்த ட்விஸ்ட்!