வேளச்சேரி 50 அடி பள்ளம்: விடிய விடிய போராடும் மீட்பு படை… ஒருவர் சடலமாக மீட்பு!

Published On:

| By Monisha

velacherry rescue work

வேளச்சேரியில் கனமழையின் போது ஏற்பட்ட 50 அடி பள்ளத்தில் இருந்து நரேஷ் என்பவரை சடலமாக மீட்டுள்ளனர் பேரிடர் மீட்பு படையினர். velacherry rescue work

மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னையே வெள்ளக்காடாக மாறியதில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதனிடையே திங்கட்கிழமை அன்று வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கின் ஒரு பகுதி இடிந்து 50 அடி பள்ளத்திற்குள் விழுந்தது.

அந்த பள்ளத்தில் 5 பேர் சிக்கிய நிலையில் 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருந்ததால் சிக்கியிருந்த 2 பேரை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

ADVERTISEMENT

அவர்களை மீட்கும் பணி இன்று 5வது நாளாக தொடர்ந்த நிலையில் அதிகாலை பள்ளத்தில் இருந்து பெட்ரோல் பங்க் ஊழியர் நரேஷ் என்பவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

ADVERTISEMENT

பள்ளத்தில் சிக்கியுள்ள ஜெயசீலன் என்பவரை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் இன்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“ஐந்து பர்லாங் பகுதியில் தனியார் கட்டிடத்தின் அடித்தளம் இடிந்து விழுந்ததில் மீட்புப் பணிகள் கடைசிக் கட்டத்தை எட்டியுள்ளது.

ஏற்கனவே 3 பேர் மீட்கப்பட்ட நிலையில் 2 பேரை தேடும் பணி நடைபெற்று வந்தது. இதில் நரேஷ் என்பவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.

ஜெயசீலனின் உடலை தேடி வருகின்றனர். அவரது குடும்பத்தினர் இங்கு தான் இருக்கின்றனர். இந்த பகுதியில் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

தவறு செய்த நிர்வாகத்திடம் இருந்தும் அரசிடம் இருந்தும் நிவாரணம் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். தற்போது பள்ளத்தில் சிக்கியுள்ள ஜெயசீலனின் மனைவி கர்ப்பமாக இருக்கிறார்கள். அவர் எதுவும் சாப்பிடாமல் இருப்பதால், பிறக்கப் போகின்ற குழந்தைக்காக சாப்பிடுங்கள் என்று சொல்லி இருக்கிறேன்.

போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பள்ளத்தில் மண் சரிந்து கொண்டே இருப்பதால் மீட்பு படையினரும் ஆபத்தான நிலையில் தான் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் 3 மணி நேரத்தில் ஜெயசீலனின் உடல் மீட்கப்படும்.

தனியார் இடத்தில் இவ்வளவு பெரிய அடித்தளத்தை யார் போட்டார்கள். யார் தவறு செய்தார்கள் என்பதை போலீஸ் விசாரிக்கும். தவறு செய்த யாரையும் தப்பிக்க விட மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

திமுக இளைஞர் அணி மாநாடு ஒத்திவைப்பு!

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களின் அடுத்த முதல்வர் யார்?

velacherry rescue work

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share