சென்னைக்கு ரெட் அலர்ட்: கார் பார்க்கிங்கான வேளச்சேரி மேம்பாலம்!

Published On:

| By Kavi

சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், வேளச்சேரி மக்கள் இன்று முதலே மேம்பாலங்களில் கார்களை நிறுத்த ஆரம்பித்துள்ளனர்.

வடகிழக்கு பருவ மழை நாளை தொடங்குகிறது. நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் மக்களும் தங்கள் உடைமைகளை பாதுகாக்க தொடங்கியுள்ளனர்.

கடந்த ஆண்டு மிக்ஜாம் புயலின் போது ஏற்பட்ட வெள்ளத்தால் வேளச்சேரி கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஒருவாரமாகியும் தண்ணீர் வடியாமல் மக்கள் கடும் சிரமப்பட்டனர். கடும் வெள்ளத்தால் கார்கள், இருசக்கர வாகனங்கள் எல்லாம் அடித்து செல்லப்பட்டன.

இந்தநிலையில் இந்த ஆண்டு மழை தொடங்கும் முன்பே வேளச்சேரி ரயில் நிலையம் எதிரில் உள்ள பாலத்தில் கார்களை கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர்.

புதிய பாலம், தரமணி டூ 100 அடி சாலைக்கு செல்லும் பாலத்திலும் இனி கார்கள் அணிவகுத்து நிற்பதை பார்க்கலாம், கடந்த ஆண்டு இந்த இரு பாலங்களிலும் கார்கள் அணிவகுத்து நின்றன என்கிறார்கள் அந்த பாலத்தை கடக்கும் வாகன ஓட்டிகள்.

வேளச்சேரி எதிரில் உள்ள மேம்பாலத்தில் காரை நிறுத்தியுள்ள ராம்நகரைச் சேர்ந்தவர் கூறுகையில், கடந்த மழையின் போது ஏற்பட்ட பாதிப்பால் எனது காருக்கு 2 லட்சம் வரை செலவானது. நாளை கனமழை பெய்யும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதனால் பாதுகாப்பாக இருக்க காரை இங்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டேன் என கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

பிரியா

ஆரம்பித்தது மழை விடுமுறை… 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கவரைப்பேட்டை ரயில் விபத்து : மேலும் 10 பேருக்கு சம்மன்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share