அனைத்து வகையான கார்களையும் பொது போக்குவரத்து வாகனங்களாக பதிவு செய்து இயக்க போக்குவரத்து துறை ஆணையர் சண்முக சுந்தரம் இன்று (நவம்பர் 17) அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் குறிப்பிட்ட வகை கார்களை மட்டுமே வாடகை கார்களாக பயன்படுத்த முடியும் என்ற விதி இருந்தது. இதனை மாற்றியமைத்து அனைத்து வகை சொகுசு கார்களையும் வாடகை கார்களாக பயன்படுத்த முடியும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்து துறை ஆணையர் சண்முக சுந்தரம் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் அனைத்து வகை கார்களையும் பொது போக்குவரத்து வாகனங்களாக பதிவு செய்து இயக்க வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அனுமதி அளிக்க வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மற்ற மாநிலங்களை போல தமிழகத்திலும் அனைத்து வகை கார்களையும் வாடகைக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று வாடகை வாகன ஓட்டுநர்கள் சங்கம் கோரிக்கை வைத்து வந்தது.
இந்தநிலையில் சொகுசு கார் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களையும் மஞ்சள் நிற போர்டுடன் பதிவு செய்து இயக்க போக்குவரத்து துறை ஆணையர் அனுமதி அளித்து உத்தரவிட்டது வாடகை வாகன ஓட்டுநர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சிலரது தூண்டுதலால் சிப்காட் அமைக்க எதிர்ப்பு: அமைச்சர் எ.வ.வேலு
Election2023: ம.பி, சத்தீஸ்கர்: மதியம் வரை வாக்கு சதவிகிதம் எவ்வளவு?
